தாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா!
சென்னை: ரஜினிகாந்த், மீனா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகி வரும் அண்ணாத்த படத்தை சிவா இயக்கியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது.
இதை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் #சூர்யா39 படத்தை சிவா இயக்க உள்ளார். அதனுடைய ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளார்.

கொரோனா தொற்று
ரஜினியின் அரசியல் வருகைக்காக அண்ணாத்த படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்தி வந்தது படக்குழு. படப்பிடிப்பின் போது சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு சில நாட்களிலேயே மீண்டும் நின்று போனது.

உடல் நலக்குறைவு
அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை மோசமடைய அரசியல் வருகைக்கு முட்டு கட்டை போட்டார். படகுழுவினருக்கு கொரோனா, ரஜினிக்கு உடல் நலக்குறைவு என அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நின்று போக மீண்டும் கால தாமதமாக தொடங்கியது.

அடுத்த படம்
இதனால் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகளை சிவா தொடங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சிவா - சூர்யா கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
Recommended Video

ரசிகர்கள் கொண்டாட்டம்
சூரரை போற்று வெற்றியை தொடர்ந்து சூர்யா நவரசா படப்பிடிப்பில் இணைந்தார். அதுமட்டுமின்றி பாண்டிராஜ், வெற்றிமாறன் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார் சூர்யா. இதற்கிடையில் #சூர்யா39 படத்தை குறித்த அறிவிப்பினால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











