Surya: கங்குவா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.. சிவா கொடுத்த அப்டேட்!
சென்னை: நடிகர் சூர்யா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடித்துவரும் கங்குவா படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
படம் அடுத்த ஆண்டு திருவிழா கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் கூறப்பட்டுள்ளது.

கங்குவா பெயருக்கு அர்த்தம் சொன்ன இயக்குநர் சிவா: நடிகர் சூர்யாவின் சிறப்பான படங்களை தொடர்ந்து ரசிகர்கள் சுவைத்து வருகின்றனர். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று பின்னணியிலான படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு பாலிவுட் நாயகி திஷா பட்டானி ஜோடியாக இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் நடத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் நடத்தப்பட்ட சூட்டிங் அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து சூட்டிங் ஸ்பாட்டை அடைந்ததாக படத்தின் இயக்குநர் சிவா தற்போதைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாக வெளிவந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்திற்காக சூர்யா தன்னுடைய 100 சதவிகித டெடிகேஷனை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மிகுந்த தரத்துடன் படத்தை வெளியிட தாங்கள் உறுதியுடன் உள்ளதாக சிவா குறிப்பிட்டுள்ளார். படத்தின் அவுட்புட் சிறப்பாக அமைந்தால் மட்டுமே படத்தின் வெளியீட்டு தேதி குறித்து முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் உச்சரிப்பு குறித்தும் அதன் அர்த்தம் குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கங்குவா என்று படத்தின் பெயரை அழுத்தத்துடன்தான் உச்சரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று அர்த்தம் என்றும் சிவா தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை தான் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். கங்குவா கிளிம்ப்ஸ் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிவா படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ 6 மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவிற்கு உயிர் கொடுத்துள்ளார் அருண்ராஜா காமராஜ். அவரது மிரட்டலான வாய்சில் கிளிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. சிவா உருவாக்கத்தில் கிளிம்ப்ஸ் வீடியோவே இத்தகைய மிரட்டலாக அமைந்துள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. படம் அடுத்த ஆண்டு திருவிழா கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











