Siva: இரண்டு ஆண்டுகள் கடுமையான உழைப்பு.. கங்குவா படத்திற்கு இயக்குநர் சிவா பெற்ற சம்பளம் இவ்வளவா?

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்தாலும் கங்குவா படம் அவருக்கு அவரது கேரியரில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படத்திற்கு அடுத்தடுத்த கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

ஆயினும் படம் கடந்த 3 நாட்களில் 100 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்களில் இந்தப்படத்தின் வசூல் 89.32 கோடி ரூபாய் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் 3 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்டை இன்றைய தினம் ஸ்டூடியோ கிரீன் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

suriya kanguva movie siva

கங்குவா படம்: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட்கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் கடந்த 14ம்தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது கங்குவா படம். சூர்யா பிரான்சிஸ் மற்றும் கங்குவன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்த நிலையில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதனிடையே, இந்தப் படத்தில் அவரது இசை காதுகளை கிழிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோல சூர்யாவின் பிரான்சிஸ் கேரக்டர் ஸ்டைலிஷ்ஷாக உருவாக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களை கவரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கங்குவா பட வசூல்: இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் முதல் இரு தினங்களில் 89.34 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 3 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 101 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றைய தினம் வாரயிறுதி நாளாக அமைந்துள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக மிக அதிகமான பட்ஜெட்டில் இந்தப்பம் உருவாகியுள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தப் படத்தில் சூர்யா கவனம் செலுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சிவா சம்பளம்: முன்னதாக வீரம், விஸ்வாசம், சிறுத்தை உள்ளிட்ட படங்களில் கமர்ஷியல் அம்சங்களை வைத்தே படங்களை இயக்கியிருந்தார் சிவா. நடிகர் அஜித்துடன் தொடர்ந்து 4 படங்களில் இணைந்திருந்த சிவா, அடுத்ததாக அவருடன் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குவா படத்திற்காக இயக்குநர் சிவா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கங்குவா படத்திற்காக மெனக்கெட்ட அவர் சம்பளமாக 5 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வரலாற்று கதைக்களத்தை சிவா கையிலெடுத்த நிலையில், அதற்கேற்ற திரைக்கதையை அவர் சிறப்பாக அமைக்க தவறியுள்ளதாகவே விமர்சிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான கதைக்களம்: திரைக்கதையிலும் இசையிலும் சிறப்பான கவனத்தை சிவா கொடுத்திருந்தால் படம் அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் கதையே இல்லை என்று ஒரு சாரார் விமர்சித்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வால்யூமை 2 பாயிண்ட் குறைக்க திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேட்டிருந்தார். பிரம்மாண்டமான படத்தை கையிலெடுத்த சிவா, சிறப்பான திட்டமிடலுடன் படத்தை அணுகியிருந்தால் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X