இந்த வருஷத்தோட பெரிய பிறந்தநாள் கிப்ட்.. சவுந்தர்யா ரஜினிகாந்த் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் உள்ளார்.

இவருக்கு கடந்த ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இயக்குநர் சவுந்தர்யா ரஜினி

இயக்குநர் சவுந்தர்யா ரஜினி

இயக்குநரும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அந்த மணவாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்றார். தொடர்ந்து இவருக்கு இவரது குடும்பத்தினர் இரண்டாவது கல்யாணம் செய்து வைத்தனர்.

இரண்டாவது ஆண் குழந்தை

இரண்டாவது ஆண் குழந்தை

முதல் திருமணத்தில் இவருக்கு வேத் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் இரண்டாவது திருமணத்தின்மூலம் இரண்டாவதாக இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயரிட்டுள்ளார். இந்தக் குழந்தையை வரவேற்பதில் வேத்துடன் இணைந்து மகிழ்ச்சியடைவதாக முன்னதாக குழந்தை பிறந்தபோது சவுந்தர்யா தெரிவித்திருந்தார்.

சவுந்தர்யா பிறந்தநாள்

சவுந்தர்யா பிறந்தநாள்

இந்நிலையில் நேற்றைய தினம் சவுந்தர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு

இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு

மேலும் இந்த ஆண்டு, கடவுள் தனக்கு மிகப்பெரிய பரிசை கொடுத்துள்ளதாகவும், தனது வீர் பாப்பாவை அவர்கள் பரிசாக தந்துள்ளதாகவும் சவுந்தர்யா குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடவுளின் குழந்தை எப்போதும் தனக்கு பின்புலமாக இருக்கும் என்றும் வாழ்க்கை எப்போதுமே உண்மையில் கிப்ட் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் புகைப்படம் பகிர்வு

சமூகவலைதளத்தில் புகைப்படம் பகிர்வு

மேலும் தன்னுடைய குழந்தையின் பெயர் சூட்டு விழாவின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் அவர் தன்னுடைய குழந்தையை கைகளில் ஏந்தி மாலையுடன் காணப்படுகிறார். அவரது பின்னால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் நின்றபடி உள்ளார். இந்தப் பதிவில் பல எமோஜிக்களையும் அவர் சேர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X