Rajinikanth: ஒவ்வொரு வருஷமும் திருமண நாளில் ரஜினி செய்யும் விஷயம்.. சுவாரஸ்யம் பகிர்ந்த சௌந்தர்யா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் தன்னுடைய 43வது திருமண நாளை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி அவரது மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் ரஜினிகாந்த் -லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்தின் பழைய படங்கள் மட்டுமில்லாமல் புதிய படங்களும் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியாகி மாஸ் காட்டியது. படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் படத்தில் அவரது மொய்தீன் பாய் கேரக்டர் பரவலாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே தற்போது அவரது சூப்பர்ஹிட் படமான அண்ணாமலை படமும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது 72 வயதாகும் ரஜினிகாந்த், இந்த வயதிலும் தலைவர் மற்றும் சூப்பர்ஸ்டார் என ரஜிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளை கடந்து திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். தமிழ், இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த், 70 வயதை கடந்த நிலையிலும் மிகவும் சுறுசுறுப்புடன் அடுத்தடுத்த முன்னணி மற்றும் இளம் இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டிய நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தையும் தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது.
அடுத்தடுத்தப் படங்கள்: கடந்த 9ம் தேதி ரஜினியின் லால் சலாம் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் அவரது இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 72 வயதாகும் ரஜினியின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள் ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வருகின்றன.
ரஜினி திருமண நாள்: இதனிடையே நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது 43வது திருமண தினத்தை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திருப்பதி கோயிலில் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ரஜினியின் வெற்றி தோல்விகளில் அவருடன் இணைந்துள்ளார் லதா ரஜினிகாந்த். நேற்றைய தினம் ரஜினியின் திருமண நாளையொட்டி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். இதனிடையே ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தும் தனது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்திருந்தார்.
ரகசியம் பகிர்ந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்: மை டார்லிங் அம்மா மற்றும் அப்பா என்று குறிப்பிட்டுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த், 43 ஆண்டுகள் இணைபிரியாமல் உள்ளதாகவும் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் 43 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது அவர்கள் போட்டுக் கொண்ட செயின் மற்றும் மோதிரத்தை ஒவ்வொரு ஆண்டு திருமண நாளின்போதும் அப்பாவை அணியும்படி அம்மா செய்வார் என்றும் கம்பெனி சீக்ரெட்டை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி மற்றும் லதா ரஜினி தங்களது மோதிரம் மற்றும் செயினை வெளிக்காட்டும்படியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











