மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் உடல் இன்று தகனம்.. பிரபலங்கள்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

Recommended Video

கனத்த இதயத்தோடு விடை தருகிறோம் | SP JANANATHAN Last rites

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

லாபம் படத்தின் எடிட்டிங்கில் இருந்த அவர், இடைவேளையில் வீட்டிற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பவில்லை.

அப்பல்லோ மருத்துவமனை

அப்பல்லோ மருத்துவமனை

இதனை தொடர்ந்து அவரது உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது சுயநினைவின்றி கிடந்த எஸ்பி ஜனநாதனை உடனடியாக மீட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நேற்று காலை மரணம்

நேற்று காலை மரணம்

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

மயிலாப்பூரில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மின்மயானத்தில் தகனம்

மின்மயானத்தில் தகனம்

இந்நிலையில் இன்று எஸ்பி ஜனநாதனின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. மயிலாப்பூரில் உள்ள மின்மயானத்தில் எஸ்பி ஜனநாதனின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

திருமணம் செய்யவில்லை

திருமணம் செய்யவில்லை

தஞ்சாவூரை பூர்விகமாக கொண்டவர் எஸ்பி ஜனநாதன். 61 வயதான இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X