twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாபத்தை பார்க்காமலே மறைந்தது இயற்கை.. வெள்ளித்திரையில் தோழர் எஸ்.பி. ஜனநாதன் நடத்திய பாடங்கள்!

    |

    சென்னை: இயற்கை படத்தை இயக்கி தேசிய விருதை பெற்ற பிரபல இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61.

    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, லாபம் என 5 தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன்.

    3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது 3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது

    விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சை மைந்தன்

    தஞ்சை மைந்தன்

    திரைத்துறையில் சீரிய கருத்துக்களை பதிய வேண்டும் என்பதற்காக இயக்குநராக மாறியவர் எஸ்.பி. ஜனநாதன். 1959ம் ஆண்டு மே 7ம் தஞ்சாவூரில் பிறந்தவர் எஸ்.பி. ஜனநாதன். எடிட்டர் லெனின், மலையாள இயக்குநர் பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணியாற்றி இயக்குநர் ஆனவர்.

    இயற்கை இயக்குநர்

    இயற்கை இயக்குநர்

    2003ம் ஆண்டு வெளியாகி சிறந்த படம் என்கிற தேசிய விருதை தட்டித் தூக்கிய இயற்கை திரைப்படம் தான் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படம். நடிகர், ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கோண காதல் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பயோ வார்

    பயோ வார்

    சர்வதேச அரசியலை சாமானியர்களுக்கு புரியும் விதமாக 2006ம் ஆண்டு நடிகர் ஜீவா, நயன்தாரா வைத்து இவர் இயக்கிய படம் தான் ஈ. பயோ வார் பற்றிய விவரங்களை அதி தீவிரமாக திரைக்கதையில் சொல்லி இருந்தார் ஜனநாதன். பசுபதி போராளியாகவும், ஆசிஷ் வித்தியார்த்தி வில்லனாகவும் இந்த படத்தில் நடிப்பில் மிரட்டி இருந்தனர்.

    பேராண்மை

    பேராண்மை

    2009ம் ஆண்டு இயக்குநர் ஜனநாதன் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கி இருந்தார். பிரபல ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் வசிலியேவ் எழுதிய 'தி டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' எனும் நாவலை தழுவி இந்த படம் படமாக்கப்பட்டது. எளிய மக்கள் எந்த இடத்துக்கு சென்றாலும், அவர்களை முன்னேற விடமாட்டார்கள் என்பதை ஜனரஞ்சகமாக உருவாக்கி இருந்தார்.

    புறம்போக்கு எனும் பொதுவுடைமை

    புறம்போக்கு எனும் பொதுவுடைமை

    சிறைகளில் எப்படி மரண தண்டனை நிகழ்த்தப்படுகிறது என்பதை தத்ரூபமாக புறம்போக்கும் எனும் பொதுவுடைமை படத்தின் மூலம் மக்களுக்கு புரியவைத்தார். விஜய்சேதுபதி, ஆர்யா, ஷியாம், கார்த்திகா நாயர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது. சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட ஜெயில் படங்களுக்கு நிகராக இந்த படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Recommended Video

    #BIG BREAKING இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்: தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி!
    கதை மட்டுமே

    கதை மட்டுமே

    இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், திரிஷா நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்திற்கு திரைக்கதை மட்டுமே எழுதியிருந்தார் எஸ்.பி. ஜனநாதன். விளம்பரங்கள் விளையாட்டில் விளையாடும் அரசியலை தனது எழுத்துக்களால் தோலுரித்துக் காட்டினார்.

    விரைவில் ரிலீஸ்

    விரைவில் ரிலீஸ்

    புறம்போக்கு எனும் பொதுவுடைமை படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய படம் தான் லாபம். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய அந்த படம் கொரோனா பரவல் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. விரைவில் அந்த படம் ரிலீசாவுள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மாரடைப்பு காரணமாக இன்று காலை 10:07 மணிக்கு மறைந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    Ace Director SP Jananathan passes away today due to cardiac arrest. He directed 5 super hit movies in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X