twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழம் பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்..கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி !

    |

    சென்னை : பழம் பெரும் இயக்குனர் எஸ்.பி முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து இவர் படங்களை இயக்கி உள்ளார்.

    இவர் ,வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருக்கிறார்.

    பல படங்களை இயக்கி உள்ளார்

    பல படங்களை இயக்கி உள்ளார்

    எஸ்.பி. முத்துராமன் ரஜினிகாந்த், கமலஹாசனின் அதிகபட்ச படங்களை இயக்கியவர். இவர் பீம்சிங், ஏ.சி. திருலோகச்சந்தர் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் உதவி இயக்குனராக வேலை பார்த்த படங்களும் பெரும்பாலானவை ஏ.வி. எம்மின் படங்கள்தான்.

    இசைஞானியின் இசையில்

    இசைஞானியின் இசையில்

    ஆக்சன் திரைப்படங்கள் பலவற்றுக்கு இவரது படங்களே முன்னோடி. கமலுக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய சகலகலா வல்லவன் இவர் இயக்கியதே இவருடைய பெருமாளான திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்து இருப்பார்.

    ஓய்வு எடுத்து வந்தார்

    ஓய்வு எடுத்து வந்தார்

    தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களை இயக்கினார்.மேலும் ரஜினியை வைத்து பாண்டியன் படத்தை இயக்கினார் அதன் பின்பு வயது மூப்பு காரணமாக படங்களை இயக்காமல் ஒய்வு எடுத்து வருகிறார்.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இந்நிலையில் இன்று எஸ்.பி. முத்துராமன் அவர்கள் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அந்த மருத்துவனை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாகவும் இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் உடல் நிலை தற்போது சீராக உளளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    English summary
    Director sp muthuraman hospitalized
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X