எஸ்.பி முத்துராமன் கொரோனாவிலிருந்து மீண்டார்… மருத்துவமனை அறிக்கை !

சென்னை : இயக்குனர் எஸ்.பி முத்துராமன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து சுமார் 72 படங்களை இயக்கி உள்ளார்.

இவர் ,வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருக்கிறார்.

உதவி இயக்குனராக

உதவி இயக்குனராக

எஸ்.பி. முத்துராமன் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ரஜினிகாந்த், கமலஹாசனின் அதிகபட்ச படங்களை இயக்கியவர் இவர். இவர். பீம்சிங், ஏ.சி. திருலோகச்சந்தர் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் உதவி இயக்குனராக வேலை பார்த்த படங்களும் பெரும்பாலானவை ஏ.வி. எம்மின் படங்கள்தான்.

திருப்புமுனை

திருப்புமுனை

ஆக்சன் திரைப்படங்கள் பலவற்றுக்கு இவரது படங்களே முன்னோடி. கமலுக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய சகலகலா வல்லவன் இவர் இயக்கியதே இவருடைய பெருமாளான திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜாவே இசையதைத்து இருப்பார்.

ரஜினிகாந்த் 25 படம்

ரஜினிகாந்த் 25 படம்

தர்மத்தின் தலைவன்,ஆறிலிருந்து ஆறுவதுவரை, குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், நல்லவனுக்கு நல்லவன் போன்ற 72 படங்களை இயக்கி உள்ளார். இதில் 25 படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக படங்களை இயக்காமல் தற்போது ஒய்வு எடுத்து வருகிறார்.

குணமடைந்தார்

குணமடைந்தார்

இந்நிலையில், ஏப்ரல் 7ந் தேதி மெட்வே மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , எஸ்.பி முத்துராமன் கோவிட் வைரஸில் இருந்து குணமடைந்து விட்டார் என்றும், தற்போது அவரின் உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும் வீட்டில் போதிய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை அறிவுறுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X