Sridhar Predictions :கமலை ரஜினி ஓவர்டேக் செய்துவிடுவார்.. அன்றே கணித்த இயக்குநர் ஸ்ரீதர்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் துவக்கிய தன்னுடைய திரையுலகப்பயணத்தை பல ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து வருகிறார்.

தனக்கு கிடைத்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை 70 வயதுகளில் இருக்கும் அவர் தற்போதும் தொடர்ந்து மெயின்டெயின் செய்து வருகிறார்.

தற்போது சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என பல முன்னணி மற்றும் வளர்ந்துவரும் நடிகர்களும் கூறுவதை கேட்க முடிகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவர். அபூர்வ ராகங்களில் துவங்கிய இவரது பயணம் அபூர்வ ராகமாகவே அமைந்துள்ளது. 70களில் பயணித்து வந்தாலும் தற்போதும் ஹீரோவாகவே அடிதடிகளிலும் தூள் கிளப்பி வருகிறார். தன்னுடைய சூப்பர்ஸ்டார் பட்டத்தையும் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். இவரது பல படங்கள் இன்றுவரை ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்ட்டில் உள்ளவை.

திறந்தே கிடக்கும் கதவு

திறந்தே கிடக்கும் கதவு

தொடர்ந்து புதியவர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து நல்ல முயற்சிகளுக்கு கைக்கொடுத்து வருகிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும் தன்னை சிறப்பாக வைத்துக் கொண்டு வருகிறார். அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டுமே கதவை திறக்கும் காட்சியில் நடித்து உடனடியாக உயிரிழப்பார். அப்பொழுது ரஜினிக்காக திறந்த கோலிவுட்டின் கதவு, தற்போதுவரை மூடப்படாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கமல் -ரஜினி காம்பினேஷன் படங்கள்

கமல் -ரஜினி காம்பினேஷன் படங்கள்

ஆரம்ப காலகட்டத்தில் கமல் -ரஜினி காம்பினேஷனலில் அதிகமான படங்கள் வந்தன. அந்தப் படங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக அமைந்தன. இவர்களின் காம்பினேஷனை மிகச்சிறப்பாக பயன்படுத்திய இயக்குநர்களில் பாலச்சந்தரும் ஒருவர். கமல் -ரஜினி இருவருக்குமே அவர்தான் குரு. இருவரையுமே திரைத்துறையில் வாடா, போடா என்று கூப்பிடும் நபர்களில் முக்கியமானவராக கேபி இருந்தார்.

இளமை ஊஞ்சலாடுகிறது படம்

இளமை ஊஞ்சலாடுகிறது படம்


இந்நிலையில் கமல், ரஜினி மற்றும் ஸ்ரீபிரியா இணைந்து நடித்திருந்த இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தை இயக்கிய சிவி ஸ்ரீதர் ரஜினி குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் ரஜினி, கமலை ஒவர்டேக் செய்துவிடுவார் என்று தான் சவால் விட்டதாகவும் அப்போது அதை யாரும் நம்பவில்லை என்றும் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கருப்பாக இருக்கும் ரஜினி எப்படி, அழகாக இருக்கும் கமலை ஓவர்டேக் செய்ய முடியும் என்று தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஜினி குறித்த இயக்குநரின் கணிப்பு

ரஜினி குறித்த இயக்குநரின் கணிப்பு

ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1978ம் ஆண்டில் இளமை ஊஞ்சலாடுகிறது படம் வெளியானது. இந்தப் படத்தில் ஒரே நாள் உனை நான் என்ற பாடலின்போது, ரஜினி கமலிடம் அந்த கார் சாவியை வை என ஸ்டைலாக சொல்வார். இந்தக் காட்சியில்தான் ரஜினியின் நடிப்பு ஸ்ரீதரை இம்ப்ரஸ் செய்துள்ளது. உடனடியாக அவர் மற்றவர்களிடம் ரஜினி கண்டிப்பாக கமலை ஓவர்டேக் செய்வார் என்று கூறியதாக அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரது கணிப்பு சில வருடங்களிலேயே நிறைவேறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X