Don't Miss!
- News
திருக்குறளை கூட சலுகை என நினைத்து விட்டாரோ.. 'எந்த விதத்திலும் உதவாத பட்ஜெட்'.. தொல். திருமாவளவன்
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இயக்குனர் ஸ்ரீகண்டனின் வனம்..ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி !
சென்னை: இயக்குனர் ஸ்ரீ கண்டன் அடுத்து வனம் என்னும் திரைப்படத்தை எழுதி இயக்கவுள்ளார்.
வெற்றி, அனு சித்ரா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.
இந்த
வாரம்
ஆரியை
எவிக்ட்
பண்ண
முடியாது..
ஆனால்
அதுக்கு
ட்ரை
பண்ணுவாங்க..
அலர்ட்டாகும்
நெட்டிசன்ஸ்!
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்

இயக்குனரின்
இயக்குனர் ஸ்ரீ கண்டன் பாலு மகேந்திரா பட்டறையில் மாணவராக இருந்து சினிமாவில் நுழைந்தவர். தன்னை நிரூபிக்க வாய்ப்புகள் தேடி கொண்டிருப்பவர்களில் ஸ்ரீ கண்டனும் ஒருவர். நிறைய குறும்படங்களை இயக்கியுள்ளார் குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், மௌலி ஆகியோரை வைத்து எடுத்த Identity என்னும் குறும் படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

தடம் பதிக்க காத்துள்ளார்
ஸ்ரீ கண்டன் தப்பு தண்டா என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து வனம் படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேசிய, ஸ்ரீ கண்டன், வனம் படத்தை இயக்க தயாரிப்பாளர் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனின் விளைவாக வனம் படத்தின் மூலம் தடம் பதிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்
நடிகர் வெற்றி 8 தோட்டாக்கள், ஜீவி போன்ற தரமான கதைகளை தேர்வு செய்து நடித்த நடிகர். இதையடுத்து புது முக இயக்குனர்களுடன் சேர்ந்து "Memories" எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் வெற்றி தற்போது வனம் படத்தை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் கதை எப்படி இருக்கும் என ரசிகர்களுக்கு சஸ்பென்ஸாக உள்ளது.

சிறப்பான சம்பவம்
தன்னை நிரூபிக்க காத்திருக்கும் இயக்குனர், தொடர்ந்து வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்யும் நடிகர் என ஸ்ரீ கண்டன் - வெற்றி கூட்டணி சரியாக அமைந்துள்ளது. ஹாரர்-த்ரில்லர் கதைகளமாக வெளிவரவுள்ள வனம் திரைப்படத்தின் மீது ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களை பூர்த்தி செய்யுமா என காத்திருந்து பார்ப்போம்.