Merry Christmas: தமிழனாக தமிழ் படத்தை இயக்கும் நீண்ட நாள் கனவு.. மெர்ரி கிறிஸ்துமஸ் இயக்குநர் பளீர்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, கத்ரினா கையில் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. முன்னதாக டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தற்போது ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தப் படத்தில் முதன்முறையாக கத்ரினா கையிப்புடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் அவரது மார்க்கெட் மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மற்றும் இந்தியில் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, கத்ரினா கையிப் மற்றும் ஸ்ரீராம் ராகவன் இணைந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யங்களை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Director Sriram Raghavan happily shares that his long standing desire comes true

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக வில்லனாக விஜய், கமல் உள்ளிட்டவர்களுடன் மோதி அதிரடியாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரினா கையிப்புடன் விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

மெர்ரி கிறிஸ்துமஸ் படம்: லவ் சப்ஜெக்ட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் தமிழில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். முன்னதாக கிறிஸ்துமசையொட்டி படம் டிசம்பர் 8ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் படம் தற்போது ஜனவரி 12ம் தேதி பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காதலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி -கத்ரினா கெமிஸ்ட்ரி: இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப் இருவரின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, கத்ரினா கையிப் மற்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ஆகியோர் பங்கேற்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீராம் ராகவன் தமிழனாக இருந்து, நீண்ட நாட்களாக தமிழ்ப்படம் இயக்க வேண்டும் என்ற கனவு தனக்கு இருந்ததாகவும் இந்தப் படம் மூலம் அந்த கனவு நனவாகியுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

லவ் சப்ஜெக்ட் +திரில்லர் கதைக்களம்: இந்தப் படம் லவ் சப்ஜெக்ட்டுடன் திரில்லர் கதையாகவும் உருவாகியுள்ளது. திரில்லர் படங்களை எடுப்பதில் மிகப்பெரிய பெயரை பெற்றவர் ஸ்ரீராம் ராகவன். இவரது அந்தாதுன் படம் இந்த ஜானரில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா காம்பினேஷனில் உருவாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் தனக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று நடிகர் விஜய் சேதுபதி மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். தொடர்ந்து பாலிவுட்டில் அவர் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X