twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் அதிரடி

    |

    சென்னை : இயக்குநர் கே.ஸ்ரீராம் முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

    படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

    பரதம் சம்மந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன என்பதை இயக்குநர் ஸ்ரீராம் நம்மிடம் தெரிவித்தார்.

     சிவாஜிக்கு நாட்டியம் சொல்லிக்கொடுத்தவர்

    சிவாஜிக்கு நாட்டியம் சொல்லிக்கொடுத்தவர்

    நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

    பெண் தன்மை வந்து விடும்

    பெண் தன்மை வந்து விடும்

    நானும் இதே துறைக்கு வந்து விட்டேன். இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடித்த 'வரலாறு' படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக காட்டப்படும்.

    சிறுமைப்படுத்துவது பற்றி

    சிறுமைப்படுத்துவது பற்றி

    அதே போல 'விஸ்வரூபம்' படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால் மனைவி வெறுப்பதாக காட்டப்பட்டிருக்கும். பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.

     பஞ்சபூதங்கள் பற்றி

    பஞ்சபூதங்கள் பற்றி

    இது தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நானே 'குமார சம்பவம்' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். நான் பரதத்தை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். பஞ்சபூதங்கள் பற்றியும், ஐந்திணைகள், நவக்கிரகங்கள் பற்றியும் நாட்டியத்தில் சொல்லி வருகிறேன்.

    முதல் பிரதி தயாராக

    முதல் பிரதி தயாராக

    கிராமத்துக் காவல் தெய்வங்களான ஏழு முனிகள் பற்றிய நாட்டியத்தையும் ஆடியிருக்கிறேன். கார்கில் போர் நடந்தபோது அதைப் பற்றியும் பரதத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம். படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது. விரைவில் வெளியாகும் என்றார் ஸ்ரீராம்.

    English summary
    Kumarasambavam Director Sriram slams Kamal and Ajith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X