உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?.. நயன்தாராவை லாக் செய்த இயக்குநர்!

சென்னை: நடிகர் தனுஷ் 3 செகண்ட் வீடியோவுக்கு 10 கோடி கேட்கிறார். அவருக்கு மனசாட்சியே இல்லையா அடுத்தவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படும் அவர் ஒரு சைக்கோ என்கிற ரீதியில் ஓம் நமச்சிவாயா போட்டு தனுஷை க்ளீன் போல்டு ஆக்கிவிட்டார் நயன்தாரா. இதே தவறைத்தானே நீங்களும் உங்கள் கணவர் விக்னேஷ் சிவனும் LIC பட டைட்டிலில் செஞ்சீங்க என அதே தலைப்பை ரெஜிஸ்டர் செய்து வைத்து போராடி வரும் இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா பேசியதும் தனுஷ் படத்தில் நடித்து பாதிக்கப்பட்டு இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி, கெளரி கிஷன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

nayanthara vignesh shivan lic

அதே சமயம் நயன்தாரா தரப்பில் நியாயம் கிடையாது என்றும் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸில் விற்கத்தான் இத்தனை டிராமா என்றும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், இப்ப தும்முனாத்தான் சரியா இருக்கும் என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்விகளை எழுப்பி லாக் செய்திருக்கிறார்.

நீங்களும் கடவுள் மன்றத்தில் பதில் சொல்லணும்: "திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம். மூன்று வினாடி காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் திரு தனுஷ் அவர்கள் இது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அதுக்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

என் கதைக்கும் அந்த தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், "உன்னால் என்ன பண்ண முடியும்" என்கிற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும் அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனை பதில் சொல்ல சொல்வீர்கள்.

தனுஷிடம் 2 வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டு, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

இப்பொழுது வரை அந்த தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.

nayanthara vignesh shivan lic

எந்த படைப்பாளியும் பல காரணங்களுடன் பல பொருள் செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதை பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இங்கு இலவசமாக எதையும் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டபடுவீர்கள் என்பதை நினைவில் கொள்க." என இயக்குநர் விளாசியுள்ளார். LIC நிறுவனமும் இந்த தலைப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்த நிலையில், Love Insurance Kompany என LIK என டைட்டிலை விக்னேஷ் சிவன் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X