சூப்பர் ஸ்டார் நடிகரை இயக்கப்போகும் பாகுபலி இயக்குநர்.. கன்ஃபார்ம் ஆனதால் குதூகலத்தில் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் ராஜமவுலி தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டுள்ளார்.

Recommended Video

எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸிஸ்!

இயக்குநர் ராஜமவுலி 2001ஆம் ஆண்டு தெலுங்கில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் ராஜமவுலி.

2009ஆம் ஆண்டு ராம் சரண் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான மகதீரா என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

பாகுபலி தி பிகினிங்

பாகுபலி தி பிகினிங்

2012ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் தெலுங்கில் ஈகா என்ற படத்தை இயக்கினார். நானி, சமந்தா நடித்திருந்த இந்தப் படம் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு பாகுபலி தி பிகினிங் என்ற பிரமாண்ட படத்தை இயக்கினார். இந்த படம் தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி நாடு முழுவதும் சக்கை போடு போட்டது.

பாகுபலி தி கன்குளுஷன்

பாகுபலி தி கன்குளுஷன்

அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்களை எதிர்பார்த்து காத்திருக்க வைத்தது. 2017ஆம் ஆம் ஆண்டு அவர் இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்குளுஷன் வெளியானது. இந்த படமும் பட்டையை கிளப்பியது.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

அதன் பிறகு தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது.

கேஎல் நாராயணா

கேஎல் நாராயணா

இந்நிலையில் வீட்டில் இருந்தப்படியே வீடியோ கான்ஃபிரன்ஸிங்கில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் ராஜமவுலி. அதில் அவரது அடுத்த புராஜெக்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மூத்த தயாரிப்பாளரான கேஎல் நாராயணாவுக்காக நான் ஒரு படத்தை இயக்க இருக்கிறேன்.

மகேஷ் பாபு ஹீரோ

மகேஷ் பாபு ஹீரோ

அந்தப் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றார். தற்போது உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட் மட்டுமின்றி சமுத்திரகனியும் நடிப்பதாக கூறியிருக்கிறார் ராஜமவுலி. மேலும் இந்தப் படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் கூறியுள்ளார் ராஜமவுலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X