Rajamouli: சினிமாவில் இருந்து விலகும் ராஜ மௌலி? கடைசி படம் எதுன்னு முடிவு பண்ணியாச்சு! ரிலீஸ் எப்போ?

சென்னை: இந்திய சினிமாவுக்கு பிரமாண்டாமான படம் என்றால் எப்படி எடுக்க வேண்டும் என்று தனது படங்கள் மூலம் பாடமெடுத்தவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. அவரது படங்களில் பாகுபலிக்கு முந்தைய படங்கள் வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தாலும். பாகுபலி படம் தான் இவருக்கு இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று தந்தது. இந்நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வேகமாக திரையுலகில் பரவி வருகிறது.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கடந்த 2001 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் இதுவரை 12 படங்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளியான ஆர்.ஆர். ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் இரண்டு ஆஸ்கார்களை வென்றது. இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் மிகவும் திருப்புமுனையை படக்குழுவினருக்கு மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவுக்கே ஏற்படுத்திய படம் பாகுபலி.

இந்த படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்த படத்தின் மேக்கிங் என்பதை இதுவரையிலும் எந்த இந்திய சினிமாவும் தொடக்கூட இல்லை. ஆனாலும் இந்த படத்தை ஆங்கிலத்தில் வெளியான காமிக் ஸ்டோரியான தி லயன் கிங் ஸ்டோரியினைப் போல உள்ளது என்று பலரும் விமர்சித்தார்கள். தி லயன் கிங் படமாகவும் வெளியானது.

Director SS Rajamouli Plans to Ritire Cinema After Mahesh babu Movie

ராஜமௌலி: இப்படியான நிலையில் இயக்குநர் ராஜமௌலி சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. மேலும் படத்தை வரும் 2027ஆம் ஆண்டு தொடங்கி 2030ஆம் ஆண்டில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடிப்பதற்கு இன்னும் கூடுதலாக சில ஆண்டுகள் ஆனாலும், இந்த படத்தை முடித்துவிட்டு, அதன் பின்னர் மகாபாரத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓய்வு முடிவு: மகாபாரதத்தை படமாக கொடுக்கிறாரா அல்லது வெப் சீரீஸாக எடுக்கப் போகிறாரா என்பது குறித்து இன்னும் அவரே முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மகேஷ் பாபு படத்தை முடித்துவிட்டு, மகாபாரதத்தையும் முடித்துவிட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றால் அவரது இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருந்த நடிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Director SS Rajamouli Plans to Ritire Cinema After Mahesh babu Movie

கோரிக்கை: இதனால் விபரம் அறிந்தவர்கள், எஸ்.எஸ். ராஜமௌலி தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். அவரைப் போன்றவர்கள் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்று விட்டால், அது திரையுலகத்திற்கு பெரிய இழப்பாக மாறிவிடும். எனவே அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதே நேரத்தில் அவரது ரசிகர்களில் ஒரு குழுவினர், அவர் ஓய்வு எடுப்பதாக முடிவெடுத்துவிட்டால் அவரது முடிவை மதிப்பதுதான் சரி. அவரும் எவ்வளவு நாட்களுக்குத்தான் சினிமா உலகில் கொஞ்சம் பிரஷரோடே இருப்பார்? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X