நள்ளிரவு 1 மணி.. டேபிள் இல்லை.. தெரு நாய்கள் வேற.. டெல்லி ஏர்போர்ட்டால் நொந்துபோன பிரபல இயக்குநர்!

சென்னை: டெல்லி விமான நிலையத்தின் நிலையை பார்த்து பிரபல இயக்குநரான எஸ்எஸ் ராஜமவுலி வேதனையுடன் கருத்து பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் எஸ்எஸ் ராஜமவுலி. 2001ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி, விக்ரமர்குடு, எமதொங்கா, மகதீரா, மர்யாத ராமண்ணா, ஈகா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. பாகுபலி படங்களின் மூலம் உலகளவில் பெரும் பிரபலமானார் இயக்குநர் ராஜமவுலி. தற்போது பெரும் பொருட் செலவில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன்

நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன்

இந்நிலையில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி விமான நிலையம் குறித்து ஒரு வேதனையான பதிவை ஷேர் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, டியர் டெல்லி ஏர்போர்ட், நள்ளிரவு 1 மணிக்கு லூஃப்தான்ஸா விமானம் மூலம் வந்தேன்.

நிரப்ப மேஜைகள் இல்லை

நிரப்ப மேஜைகள் இல்லை

ஆர்டி பிசிஆர் டெஸ்ட்டுக்காக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்தும் சுவரில் ஃபார்ம்களை வைத்தும் நிரப்பினர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. மேஜைகள் வழங்குவது ஒரு எளிதான சேவை.

ஏராளமான தெரு நாய்கள்

ஏராளமான தெரு நாய்கள்

அதனை தொடர்ந்து வெளியேறும் வாயிலில் ஏராளமான தெரு நாய்கள் நின்று கொண்டிருந்தன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு முதல் பார்வையே நல்ல விதமான பார்வையை தராது. இதனை கவனத்தில் கொள்ளவும்.. நன்றி என பதிவிட்டிருந்தார் எஸ்எஸ் ராஜமவுலி.

விமான நிலையம் பதில்

விமான நிலையம் பதில்

இதனை பார்த்த டெல்லி விமான நிலைய நிர்வாகக்குழு உடனடியாக ராஜமவுலியின் புகாருக்கு ரியாக்ட் செய்துள்ளது. டெல்லி விமான நிலைய டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, உங்களுடைய எங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை கொடுத்த உங்களின் மதிப்புமிக்க ஃபீட்பேக்குக்கு நன்றி.

அவசர அடிப்படையில்..

அவசர அடிப்படையில்..

ஆர்டி-பி.சி.ஆர் தொடர்பான நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் எங்களிடம் மேசைகள் உள்ளன; எவ்வாறாயினும், பிற இடங்களில் அதிகரிக்கப்படும் மேசைகள் வருகையின் அனுபவத்தை மேம்படுத்தும், மேலும் எங்கள் குழு இதை அவசர அடிப்படையில் கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளது.

தெரு நாய் பிரச்சனை

தெரு நாய் பிரச்சனை

இதனை பார்த்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தெரு நாய்கள் பிரச்சனையையும் தீர்க்குமாறு கூறியுள்ளார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X