Rajamouli: அட இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா.. இயக்குநர் ராஜமௌலியின் க்யூட் டான்ஸ் வீடியோ!
ஐதராபாத்: இயக்குனர் ராஜமௌலி நான் ஈ படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இந்தப் படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டு அனைத்து மொழி ரசிகர்களையும் சிறப்பாக கவர்ந்தது. இதில் நானி, சமந்தா உள்ளிட்டவர்கள் வீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஒரு ஈயை மட்டுமே வைத்து சிறப்பான கதைக்களத்துடன் ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருந்தார் ராஜமௌலி.
இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மிகப் பெரிய கவனத்தை ஏற்படுத்தின. சர்வதேச அளவில் இந்த படங்கள் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்று அதிரடி கிளப்பின. இதையடுத்து இறுதியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் வசூல் சாதனை படைத்ததுடன் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ளன. இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தொடர்ந்து கோல்டன் க்ளோப், தேசிய விருதுகள் என இந்த படம் அடுத்தடுத்து விருதுகளை குவித்து வருகிறது.

இயக்குநர் ராஜமௌலி: நான் ஈ படம் மூலம் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அதிகமான கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜமௌலி. இதையடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் நான் நீ என போட்டியிட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார் ராஜமௌலி. வரலாற்றுக் கதைக்களத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் சர்வதேச அளவில் இவரை மிகப்பெரிய அளவில் ரீச் செய்துள்ளன. இந்த இரு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அதிகமான வசூல் மழையை கொடுத்தன.
சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஆர்ஆர்ஆர்: தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் இறுதியாக வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஆஸ்கர் விருது, தேசிய விருது, கோல்டன் க்ளோப் விருது என அடுத்தடுத்த விருதுகளை அள்ளியது. இந்த படமும் வசூல் சாதனை படைத்தது. படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியிருந்தனர். படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று படக்குழுவினருக்கு உற்சாகத்தை பெற்று தந்துள்ளது. அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் மகேஷ்பாபு இணையவுள்ளார்.
மகேஷ் பாபுவுடன் கூட்டணி: இந்தப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வைவல் திரில்லராக படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் சிறப்பான திரை கதையும் காட்சி அமைப்புகளையும் சேர்த்து மகேஷ் பாபுவின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டை ராஜமௌலி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் பிரம்மாண்டமான படங்களின் இயக்குனர் மட்டும் இல்லை என்று சமீபத்தில் நிரூபித்துள்ளார் ராஜமௌலி.
ராஜமௌலி டான்ஸ் வீடியோ: இவர் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. சில நண்பர்களுடன் இணைந்து இந்த வீடியோவில் அவர் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவில் பிரபுதேவா பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள ராஜமௌலி, நண்பர்களுடன் இணைந்து சிறப்பான டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்டுள்ளார். அட இவர் இயக்கத்தில் மட்டும் தான் பெஸ்ட் என்று நினைத்தோமே என்று ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவரது நடனம் மற்றும் அது குறித்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மகேஷ்பாபு கேரியர் பெஸ்ட்?: அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ராஜமௌலி இயக்கவுள்ள படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கண்டிப்பாக 2026ல் தான் ரிலீசாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மகேஷ் பாபுவின் மற்றப்பட வாய்ப்புகள் பாதிக்கப்பட்டாலும் முன்னதாக பிரபாஸிற்கு பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் சிறப்பாக அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது போல மகேஷ் பாபு கேரியரிலும் ராஜமௌலி இயக்க உள்ள இந்த படம் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











