SU Arun Kumar Wedding: வீர தீர சூரன் இயக்குநர் திருமணம்.. விக்ரம், விஜய்சேதுபதி நேரில் வாழ்த்து!

சென்னை: சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா, வீர தீர சூரன் என பல படங்களை இயக்கியுள்ள இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் திருமணம் இன்று நடைபெற்றது. அந்த திருமண விழாவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நேரில் கலந்துக் கொண்டு இயக்குநரை வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மதுரை அருகே உள்ள பரவை எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் அருண் குமார். சென்னையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது சினிமா மீது ஆர்வம் ஏற்பட்ட நிலையில், நாளைய இயக்குநர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

su arunkumar wedding celebrity marriage chiyaan vikran

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் நட்பு: பண்ணையாரும் பத்மினியும் படத்தை 2014ம் ஆண்டு இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் அருண் குமார். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்தே விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றினர். பண்ணையாரும் பத்மினியும் படம் முடிந்த நிலையில், மீண்டும் இருவரும் சேதுபதி படத்திலும் இணைந்தனர். இதே கூட்டணி சிந்துபாத் படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை. சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் அருண் குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சியான் விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். 2ம் பாகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

su arunkumar wedding celebrity marriage chiyaan vikran

அருண் குமார் திருமணம்: இயக்குநர் அருண் குமார் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரது திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று இயக்குநரையும் அவரது மனைவியையும் வாழ்த்தியுள்ளனர். சியான் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, நடிகை துஷாரா விஜயன் என பலரும் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா என வீர தீர சூரன் டீம் மொத்தமும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X