என்கிட்ட எதுவுமே கேட்கலை.. முழுமையான நம்பிக்கை வச்சிருக்காரு.. விக்ரம் குறித்து இயக்குநர் நெகிழ்ச்சி

சென்னை: தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் வீர தீர சூரன் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ, போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த படத்தின் 30 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் அருண்குமார் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி வருவதாகவும் தன்னுடைய முந்தைய படமான சித்தா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படத்தை தான் இயக்கி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். படத்தின் சூட்டிங் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தில் விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

Vikram SU Arunkumar tamil cinema

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சூழலில் தற்போது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான துருவ நட்சத்திரம் படமும் நீண்ட காலங்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் அருண்குமார்: இந்நிலையில் படத்தின் 30 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தென்காசி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. அருண்குமார் முன்னதாக சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் மூலம் கவனத்தைப் பெற்றவர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது வீர தீர சூரன் படத்தில் அவர் இணைந்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் பிரமோ, போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்தப் படம் குறித்து அருண்குமார் பேசியுள்ளார்.

வீர தீர சூரன் படம்: படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி வருவதாக அருண்குமார் தெரிவித்துள்ளார். தன்னுடைய முந்தைய படமான சித்தா படம் போல வீர தீர சூரன் இருக்காது என்றும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த படத்தை தான் இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடித்து வரும் விக்ரமிடம் தான் அதிகமான விஷயங்களை தொடர்ந்து கற்றுத் வருவதாகவும் குறிப்பாக அவருடைய எளிமையான குணம் தன்னை மிகவும் கவர்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த படத்தில் தன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து விக்ரம் நடித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Vikram SU Arunkumar tamil cinema

அருண்குமார் நெகிழ்ச்சி: இந்தப் படத்தில் ஆக்ஷனுடன் எமோஷனும் அதிகமாக காணப்படும் என்றும் ரசிகர்களுக்கு சிறப்பான சினிமா அனுபவத்தை தர தான் முயற்சித்து வருவதாகவும் அருண்குமார் மேலும் கூறியுள்ளார். இந்தப் படத்தை இயக்க தனக்கு முழு சுதந்திரத்தை விக்ரம் அளித்து வருவதாகவும் தன்னுடைய ஸ்டைலில் படத்தை இயக்க அவர் உறுதுணையாக இருந்து வருவதாகவுலம் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X