கர்ணன் பட டீஸரை புகழ்ந்த பிரபல இயக்குனர்.. என்ன சொன்னார் தெரியுமா!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

கலைபுலி எஸ் தாணு இத்திரைப்படத்தை தயாரித்து இருக்க சமீபத்தில் வெளியான கண்டா வர சொல்லுங்க பாடல் இணையதளத்தில் மாபெரும் ஹிட்டடித்தது.

இந்த திரைப்படத்தின் டீஸரை பார்த்த பிரபல இயக்குனர் ஒருவர் பாராட்டி பதிவிட்டுள்ள ட்வீட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இரண்டு வருடங்கள்

இரண்டு வருடங்கள்

இயக்கும் இரண்டாவது திரைப்படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கிய தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் வெளியாகி இரண்டு வருடங்கள் கழிந்த போதும் இதுவரை இதன் தாக்கம் தமிழ் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளை இந்த படம் வென்று குவித்தது.

கர்ணன்

கர்ணன்

இந்நிலையில் தனது அடுத்த திரைப்படத்திற்கு மாரி செல்வராஜ் கர்ணன் என தலைப்பிட்டு இருக்க அதில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

பாராட்டி ட்வீட்

பாராட்டி ட்வீட்

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகிவரும் வெள்ளையானை படத்தை இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இயக்கியுள்ளார். இந்த படம் மிக விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தற்போது கர்ணன் படத்தின் டீஸரை பார்த்து விட்டு பாராட்டி ட்வீட் பதிவு போட்டுள்ளது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள்

வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள்

ட்வீட் பதிவில் அவர் கூறியதாவது " தம்பி மாரி கர்ணன் டீஸர் பார்த்தேன். வேற லெவலா இல்ல இதுக்கு பேரு வேற வைக்கனும்ப்பா.. உன் கர்ணன் எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான். உன் குழு மொத்தத்திற்கும் மிகப்பெரிய வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள்". இவ்வாறு கர்ணன் பட டீஸரை பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து பாராட்டி இருந்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவின் ட்விட்டர் பதிவு இப்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. கர்ணன் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X