சிம்புவின் 50வது படத்தை இயக்குகிறாரா சுதா கொங்குரா... விரைவில் அறிவிப்பு
சென்னை : நடிகர் சிம்புவிற்கு மாநாடு படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
இதையடுத்து அவர் தனது வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் சூட்டிங்கிற்காக ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவரது 50வது படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு உடல் எடை கூடி, விமர்சனங்களுக்கு உள்ளானார். இதையடுத்து தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாகவும் பிட்டாகவும் மாறியுள்ளார். அவரது முந்தைய படம் ஈஸ்வரன் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. வெற்றிப் படமாகவும் அமைந்தது.

மாநாடு படம்
இதையடுத்து கடந்த நவம்பர் 25ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சிம்புவின் மாநாடு படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் திரைக்கதை அனைவரையும் கவரும்வகையில் அமைந்திருந்தது

பிசியான சிம்பு
சிம்புவின் நடிப்பும் சிறப்பான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து நிற்கக்கூட நேரமில்லாமல் சிம்பு சூடடிங்கிற்காக ஓடிக் கொண்டிருக்கிறார். படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இது விமர்சனங்களுக்கு உள்ளானது.

வெந்து தணிந்தது காடு படம்
இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படத்திற்காக உடல் எடையை குறைத்து சிறப்பான கெட்டப்பில் காணப்படுகிறார். நடிப்பிற்காக இப்படி மெனக்கெட்டு அவர் நடிப்பது மிகவும் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல படத்திலும் அடுத்ததாக வேல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கொரோனா குமார் படத்திலும் கவனம் செலுத்தவுள்ளார். கொரோனா குமார் சிம்புவின் 49வது படம்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?
இதையடுத்து சிம்புவின் 50வது படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே சுதா கொங்கராவுடன் இணைந்து சிம்பு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சுதா கொங்கரா சிம்புவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளதாகவும் அது சிம்புவிற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் 50வது படம்
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இறுதி சுற்று, சூரரை போற்று என்று வித்தியாசமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சுதா கொங்கரா, அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. சிம்புவின் 50வது படத்தில் இந்தக் கூட்டணி இணைந்தால் சிம்பு ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமான செய்தியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











