செம கெமிஸ்ட்ரி! அக்‌ஷய் குமாருடன் பைக்கில் வலம் வரும் சுதா கொங்கரா.. வீடியோ பாக்கவே அழகா இருக்கே!

மும்பை: இந்திய சினிமாவிலேயே மிகக் குறைவான பெண் திரைப்பட இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்பட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஆண்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என பேசப்பட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு திரைப்பட இயக்கத்தில் பெண்கள் கால் பதித்தது மட்டும் இல்லாமல் அதில் கோலோச்சியும் வருகின்றனர். தமிழ் சினிமாவில் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், கே.டி என்கின்ற கருப்புத்துரை படத்தை இயக்கிய மதுமிதா, இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா என அனைவரும் தங்களது முதல் படத்திலேயே முத்திரை பதித்தனர்.

Sudha Kongara Suriya Akshay Kumar

சுதா கொங்கரா இறுதிச்சுற்று படத்திற்குப் பின்னர், சூரரைப் போற்று படத்தினை இயக்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா மற்றும் அபர்ணா பால முரளி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தினை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தினை ஓ.டி.டி., தளத்தில் வெளியானது. கொரோனா காலகட்டம் என்பதால் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின் படங்களை எதிர்வரும் காலங்களில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் எனவும் கூறியிருந்தனர்.

Sudha Kongara Suriya Akshay Kumar

இப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை துவக்கிய கோ.ரா. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படமாகும். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில் கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, மோகன் பாபு, பூ ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் முதலில் வெளியான போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது.

Sudha Kongara Suriya Akshay Kumar

அமேசான் பிரைமில் வெளியானதால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. 2021 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தையும் சுமுகமான முடிவை எட்டியது. ஆனால் அந்த காலகட்டத்திலும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் படத்தை தியேட்டரில் வெளியிடும் வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால் 2021 ஆம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க மட்டும் சத்யம் தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் அதிகம்.

Sudha Kongara Suriya Akshay Kumar

இந்தி ரீ மேக்: விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற சூரரைப் போற்றி திரைப்படத்தை சுதா கொங்கரா ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது அக்‌ஷய் குமார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததைக் காட்டிலும் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீ மேக்கிற்கு படக்குழு சர்ஃபிரா என பெயரிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Sudha Kongara Suriya Akshay Kumar

ட்ரெண்ட் ஆகும் வீடியோ: இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த வீடியோவில் அக்சய் குமார் பைக்கினை ஓட்டிவர, சுதா கொங்கரா பின்னால் அமர்ந்துள்ளார். அக்‌ஷய் குமார் தனது இரண்டு கைகளையும் பறப்பது போல் செய்ய, பின்னால் அமர்ந்திருந்த சுதா கொங்கராவும் அவ்வாறு செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் ரசிகர்கள் சிலர், டைட்டானிக் படத்தின் போஸ்டரைப் போல் உள்ளது எனவும், இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி ஒத்துப்போகின்றது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X