Sudha Kongara: புறநானூறு படம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்திய சுதா கொங்கரா.. எப்படி உருவாகும்?
சென்னை: சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா உடன் சூர்யா 43 படத்தில் அவர் இணையவுள்ளார். முன்னதாக இந்த கூட்டணி சூரரைப் போற்று படத்திற்காக இணைந்து மாஸ் வெற்றியை மட்டும் இல்லாமல் தேசிய விருதுகளையும் குவித்தது. இதனிடையே தற்போது உருவாகவுள்ள சூர்யா 43 படத்திற்கு புறநானூறு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா சூர்யாவுடன் இணைந்துள்ளனர்.
படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்கவுள்ளதால் தன்னுடைய கெட்டப்பை அவர் அதற்கேற்ப மாற்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கங்குவா படத்தில் போர் வீரனாக நடித்திருந்த சூர்யா அதற்கு ஏற்ப தன்னுடைய உடலை சிறப்பாக ஏற்றி இருந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவன் லுக்கிற்காக அவர் தற்போது தன்னுடைய பிட்னஸை பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் மாற்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் மதுரை உள்ளிட்ட அடுத்தடுத்த லோகேஷன்களில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளன.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா பல ஆண்டுகாலமாக கோலிவுட்டின் வெற்றிகரமான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக இவரது நடிப்பை ஏராளமான ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் ஒரு கட்டத்தில் தன்னை ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றிக் கொண்டார். பாலாவின் நந்தா உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்கு உதவியாக அமைந்தன. தற்போது தன்னுடைய படங்களில் ஆக்சன், காமெடி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக் கொண்டு வருகிறார் சூர்யா. கதைக்கும் முக்கியத்துவம் தந்து சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்கள்: அந்த வகையில் சூறரை போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்கள் வெளியாகி வெற்றி படங்களாகவும் அமைந்தன. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப்படம் வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும் சர்வதேச அளவில் 10 மொழிகளில் படம் வெளியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கங்குவா படம்: கமர்ஷியல் படங்களை எடுத்து வந்த சிவா, முதல்முறையாக இந்த படம் மூலம் மிரட்டலான திரை கதையுடன் ரசிகர்களை அணுக உள்ளார். இதுவும் இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் இதனிடையே அடுத்ததாக பாலிவுட்டில் கர்ணா படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யா 43 படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா அச்சம்: முன்னதாக சூரரைப் போற்று படத்தை பயோ பிக்காக இயக்கியிருந்தார் சுதா கொங்கரா. இந்தப் படம் சூர்யா கேரியரில் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகவுள்ள நிலையில் சூரரை போற்று படத்தை காட்டிலும் இந்தப் படம் மிகவும் சவால் நிறைந்ததாக தனக்கு இருக்கும் என்று அவர் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளதால் தனக்கு சிறிதளவு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி: தன்னை பாதித்த ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் தான் கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் அது ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் எடுக்கவே தான் விரும்புவதாகவும் இல்லையென்றால் ரசிகர்களுக்கு விரைவில் போர் அடித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது சூரரை போற்று. அந்தப் படத்தை காட்டிலும் தற்போது புறநானூறு படத்தின் கதைக்களம் சிறப்பாக இருக்கும் என்று சுதா கொங்கரா கூறியுள்ள நிலையில் படம் குறித்து தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். ஆனாலும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து தாமதமாகி வருகிறது. மதுரை, திருச்சி, சிதம்பரம் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











