பராசக்தி சம்பள பாக்கி பஞ்சாயத்து.. கோர்ட் ஏறிய சுதா கொங்கரா.. இதயம் முரளி பட ரிலீசுக்கு தடை கோரி மனு
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுதா கொங்கரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பள பாக்கி தொடர்பாகத் தொடர்ந்துள்ள அதிரடி வழக்கு தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
சம்பள பாக்கி : இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'பராசக்தி' படத்திற்காக, தனக்கு ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ₹8.39 கோடி ஊதியத்தை தயாரிப்பு தரப்பு இன்னும் வழங்கவில்லை என்று கூறி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பள பாக்கி தராததால், வேறு வழியின்றி அவர் இந்த சட்டப்பூர்வமான அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சுதா கொங்கராவின் தரப்பு நியாயங்களைக்கேட்டறிந்தது. அதன் அடிப்படையில், வரும் ஜூலை 8-ஆம் தேதி வரை 'பராசக்தி' படத்தின் செயற்கைக்கோள் வழி வெளியீட்டு நடவடிக்கைகள் மற்றும் அது சார்ந்த எந்தவொரு வியாபார ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து, நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

'இதயம் முரளி' படத்திற்கு சிக்கல்: இந்த தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகவிருக்கும் மற்றொரு முக்கிய திரைப்படமான 'இதயம் முரளி' படத்தின் மீதும் சுதா கொங்கரா தனது மனுவில் நடவடிக்கை கோரியுள்ளார். வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பள பாக்கி தராமல் அடுத்தடுத்த படங்களை வெளியிட தயாரிப்பு தரப்பு முயல்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பஞ்சாயத்து தீருமா?: ஜூலை 8-ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரவுள்ள நிலையில், 'பராசக்தி' சாட்டிலைட் உரிமை மற்றும் 'இதயம் முரளி' படத்தின் ரிலீஸ் தப்பிக்குமா அல்லது சுதா கொங்கராவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தால் கோலிவுட் வட்மாரத்தில் பேசும் பொருளாகி மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications