அடுத்த பயோபிக்கிற்கு தயாராகும் சுதா கொங்கரா.. இந்தமுறை யார் தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா லீட் ரோலில் நடித்து வெளியானது சூரரைப் போற்று பயோ பிக். ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த பயோபிக் உருவாக்கப்பட்டது.

ஜிஆர் கோபிநாத் இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் பயணங்களை சாத்தியமாக்கியவர். இந்த படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கியிருந்தார்.

ஓடிடியில் வெளியான போதிலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. படம் தேசிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை குவித்துள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று படம்

சூர்யாவின் சூரரைப் போற்று படம்

இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் பயணங்களை சாத்தியமாக்கியவர் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கியிருந்தார். படம் ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

குறைந்த விலையில் விமான சேவை

குறைந்த விலையில் விமான சேவை

இந்தப்படத்தில் அனைவருக்கும் குறைந்த விலையில் விமான சேவையை கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நெடுமாறன் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா வாழ்ந்திருந்தார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அபர்ணா முரளியும் அவரது மனைவியாக சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இந்தக் கதையில் நெடுமாறன் சந்திக்கும் முட்டுக்கட்டைகள் மற்றும் அவர் அதிலிருந்து மீண்டு எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதாக படத்தின் கதைக்களம் காணப்பட்டது.

 இயக்குநர் சுதா கொங்கரா

இயக்குநர் சுதா கொங்கரா

இறுதிச்சுற்று என்ற படத்தில் குத்துச்சண்டையை மையமாக கொண்டு சிறப்பான கதைக்களத்தை கொடுத்த சுதா கொங்கரா, சூர்யாவை சிறப்பாக பயன்படுத்தி, பயோபிக்கை சூரரைப் போற்று என்ற படத்தில் கொடுத்திருந்தார். இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

இந்தியில் தயாரிக்கும் சூர்யா

இந்தியில் தயாரிக்கும் சூர்யா

இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். படத்தில் அவர் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் சூர்யாவை சுதா கொங்கரா இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக பயோ பிக்காக இருக்காது என்று முன்னதாக தனது பேட்டியொன்றில் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார்.

மீண்டும் பயோபிக் இயக்கும் சுதா கொங்கரா

மீண்டும் பயோபிக் இயக்கும் சுதா கொங்கரா

ஆனால் சுதா கொங்கரா மீண்டும் பயோ பிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் லீட் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தில் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக்கியிருந்தார் சூர்யா. இந்நிலையில் ரத்தன் டாடா பயோபிக்கில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X