வில்லத்தனத்தில் மாஸ் காட்டிய அஜித்... சுதா கொங்கராவுக்கு பிடித்த அஜித் படம்
சென்னை : துரோகி படம் மூலம் தன்னை இயக்குராக அறிமுகப்படுத்தி கொண்டவர் சுதா கொங்கரா.
அடுத்தடுத்து இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களின் மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் தனக்கு பிடித்த அஜித்தின் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்குரா மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து கடந்த 2010ல் வெளியான துரோகி படத்தின் மூலம் தன்னை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2016ல் இறுதிச்சுற்று படம்
இதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் இவரது அடுத்த இயக்கத்தில் இறுதிச்சுற்று படம் வெளியானது. குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் ரித்திகா சிங் மற்றும் மாதவன் நடித்திருந்தனர். இந்தப் படம் பல விருதுகளை பெற்றுத் தந்தது.

சிறப்பான திரைக்கதை
சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு இளம்பெண் எவ்வாறு குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெறுகிறார், அதற்கு பயிற்சியாளராக மாதவன் எவ்வாறு மெனக்கெடுக்கிறார் மற்றும் அவர்களுக்கிடையிலான காதல் என கதை செல்லும். சிறப்பான திரைக்கதையுடன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சூரரை போற்று படம்
இதைதொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இந்தப் படம் கடந்த 2020ல் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. தொடர்ந்து புத்தம் புது காலை, பாவக்கதைகள் ஆகிய வெப் தொடர்களிலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.

மங்காத்தா தான் பிடிக்கும்
இவரது அடுத்த படம் யாரை வைத்து இயக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் மங்காத்தா படம்தான் தனக்கு அவரது நடிப்பிலேயே மிகவும் பிடித்தமான படம் என்று சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் அடுத்த படம்?
சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அவர் அஜித்தின் படம் குறித்து தற்போது பேசியுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக அவர் அஜித்தின் படத்தை இயக்குவாரா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளது.
Recommended Video

வில்லத்தனத்தில் மாஸ்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான படம் மங்காத்தா. இந்தப் படத்தில் நெகட்டிவ் கலந்து வில்லத்தனத்தில் கலக்கியிருந்தார் அஜித். இந்தப் படம் அவரது 50வது படமாக இருந்தது. முன்னதாக வாலி படத்தில் தனது வில்லத்தனத்தால் மிரட்டியிருந்தார் அஜித்.


Click it and Unblock the Notifications











