கோபிநாத் வாழ்க்கைக் கதையில நடிச்சது பெருமை... சூரரைப் போற்று எனக்கு முக்கியமான படம்: சூர்யா பேச்சு

By

Recommended Video

Soorarai Pottru - Veyyon Silli Live | Sudha Kongara | Surya

சென்னை: ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைக் கூறும் சூரரைப் போற்று படத்தில் நடிப்பதற்காக பெருமைபடுகிறேன் என்று நடிகர் சூர்யா கூறினார்.

ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இன்று நடந்தது.

முக்கியமான படம்

முக்கியமான படம்

படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன் சில்லி' என்று தொடங்கும் அந்தப் பாடலை ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் மற்றும் படத்தின் ஹீரோ சூர்யா இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் சூர்யா கூறும்போது, எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் இந்த படத்தை முக்கியமாக கருதுகிறேன்.

30 நிமிட காட்சிகள்

30 நிமிட காட்சிகள்

படம் சிறப்பாக வருவதற்காக, இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவினருக்கும் நன்றி கூற வேண்டும்.

ஒரு காலத்தில்

ஒரு காலத்தில்

கண்டுபிடிப்புகள் எப்படி முக்கியமோ அதைவிட பொதுமக்களுக்கு அது எந்தளவு உபயோகமாக இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். அந்த சிறப்பான செயலை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகித பேர்தான் விமானத்தை உபயோகப்படுத்தினார்கள்.

பெருமைபடுகிறேன்

பெருமைபடுகிறேன்

அப்படிப்பட்ட காலகட்டத்திலேயே ரூ.1/- கட்டணத்தில் சாதாரண மனிதரையும் பறக்க வைத்து விமான துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து சாதனை புரிந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையைக் கூறும் இந்த படத்தில் நடிப்பதற்காக பெருமைபடுகிறேன்.

70 குழந்தைகள்

70 குழந்தைகள்

அதை அஜய் சிங் நிறைவேற்றி இருக்கிறார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மற்றும் அஜய் சிங்-கின் கடின முயற்சியால் 70 குழந்தைகளுக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார். இந்நிகழ்ச்சியில், இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் விவேக், நடிகர் மோகன்பாபு, சோனி மியூசிக் அசோக், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X