இயக்குநர் சுதா கொங்கரா ஜல்லிக்கட்டு காளை மாதிரி.. நடிகர் மாதவன்!

சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்

துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என இயக்கிய 3 படங்களில் இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார்

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மாதவன், சுதா கொங்கரா ஜல்லிக்கட்டு காளை மாதிரி என புகழ்ந்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கவனத்தைப் பெறவில்லை

கவனத்தைப் பெறவில்லை

சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக உருவெடுத்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா துரோகி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். துரோகி எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தைப் பெறவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று.

மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக

மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக

நடிகர் மாதவன் இந்த படத்தில் மிரட்டலான குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்து அசத்தியிருப்பார். அதுவரை மாதவனை சாக்லேட் பாயாக கண்டு வந்த ரசிகர்களுக்கு மாதவனின் திடீர் மாற்றத்தை பார்த்து ஷாக் ஆகினர். தமிழ் சினிமாவில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதில் மிகச்சிறந்த படமாக இறுதிச்சுற்று இன்று வரை இருப்பதற்கு காரணம் நடிகர் மாதவனின் மிரட்டலாக நடிப்பும் சுதா கொங்கராவின் இயக்கமும் தான். மேலும் இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்

சக்கைப் போடு போட்டது

சக்கைப் போடு போட்டது

இறுதிச்சுற்று தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இறுதிச்சுற்று திரைப்படம் தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கிய இருக்க நடிகர் வெங்கடேஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழில் நடித்த ரித்திகா சிங் தெலுங்கிலும் நடித்து அசத்தி இருந்தார்.

சுதா கொங்கரா ஜல்லிக்கட்டு காளை மாதிரி

சுதா கொங்கரா ஜல்லிக்கட்டு காளை மாதிரி

கடைசியாக சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தை இயக்கி இந்திய அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சுதா கொங்கரா இப்பொழுது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். அடுத்ததாக அஜித் அல்லது சிம்புவை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் மற்றும் சுதா கொங்கரா கலந்து கொண்டனர் அதில் பேசிய மாதவன் இயக்குநர் சுதா கொங்கரா ஜல்லிக்கட்டு காளை மாதிரி. நான் பணியாற்றி இயக்குனர்களிலேயே மிகவும் பவர்ஃபுல்லான இயக்குநர் என்றால் அது சுதா கொங்கரா தான் என புகழ்ந்து பேசி உள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X