கையில் அடிபட்டு காயத்துடன் காணப்படும் சுதா கொங்கரா.. சூரரைப் போற்று இந்தி ரீமேக் சூட்டிங் கேன்சல்!
சென்னை : இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என கலக்கல் படங்களை ரசிகர்களுக்கு பிடித்த கதைக்களத்தில் கொடுத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படம் 6 தேசிய விருதுகளை குவித்தது.
தற்போது சூரரைப் போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

இயக்குநர் சுதா கொங்கரா
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என ரசிகர்களை கவரும் வகையில் கதைக்களங்களில் பயணித்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. இறுதிச் சுற்றுப்படத்தில் குத்துச் சண்டையை கையில் எடுத்த இவர், சூரரைப் போற்று படத்தில் பயோ பிக்கை கையில் எடுத்து அதை ரசிகர்களுக்கு ஏற்றாற்போல சரியாக கொடுத்திருந்தார்.

சூரரைப் போற்று படம்
சூரரைப் போற்று படம் சூர்யாவின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படம் அவருக்கு தயாரிப்பாளராகவும் கைக்கொடுத்தது. படம் வசூலை குவித்ததுடன் 6 தேசிய விருதுகளையும் குவித்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்பான இசை என தேசிய விருதுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு சேர்த்தது.

இந்தியில் ரீமேக்
இந்தப் படத்தின் சிறப்பான வரவேற்பை தொடர்ந்து படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா இந்தப் படத்தை தயாரித்துவரும் நிலையில், தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தப் படத்தை இந்தியிலும் இயக்கி வருகிறார். படத்தில் அக்ஷய் குமார் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.

சுதா கொங்கராவிற்கு ஏற்பட்ட விபத்து
சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, உயர்ரக கார் ஒன்றை வாங்கியிருந்தார். அதை தனது மனதிற்கு பிடித்தமானவர்களுடன் கொண்டாடியதாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பின் போது விபத்து நிகழ்ந்துள்ளது.

அதிகமான வலி
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை பகிர்ந்துள்ள சுதா கொங்கரா, வலி அதிகமாக உள்ளதாகவும் ஒரு மாத காலத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது வேண்டாத ஓய்வு என்றும் கூறியுள்ளார். இதனிடையே அவர் விரைவில் குணமடைய படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கமெண்ட் செய்துள்ளார்.

புகைப்படத்தை பகிர்ந்த சுதா கொங்கரா
இந்த ட்விட்டர் பக்கத்தில் சுதா கொங்கரா கையில் பெரிய கட்டுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனால் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கின் சூட்டிங் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துக் கொண்டு, சூர்யா அல்லது சிம்புவின் படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











