Sudha Kongara: ப்ளீஸ் கன்டினியூ பண்ணுங்க..அல்போன்ஸ் புத்ரனிடம் கோரிக்கை வைத்த சூர்யா பட இயக்குநர்!
சென்னை: பிரேமம், நேரம், கோல்ட் போன்ற படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

குறிப்பாக இவரது பிரேமம் படம் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்தில்தான் சாய் பல்லவி உள்ளிட்ட 3 நாயகிகளை இவர் அறிமுகப்படுத்தினார்.
தற்போது சாண்டி மாஸ்டரை ஹீரோவாக வைத்து கோல்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்: இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம், நேரம், கோல்ட் போன்ற சிறப்பான படங்களை கொடுத்தவர். தற்போது சாண்டி மாஸ்டரை ஹீரோவாக வைத்து கோல்ட் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் மொத்தமாக 7 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்போன்ஸ் புத்ரன் அதிர்ச்சிப்பதிவு: கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அல்போனஸ் புத்ரன் தனது சமீபத்திய பதிவில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், வெப் தொடர்கள் போன்றவற்றை இயக்க முயற்சிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் அதிர்ச்சி: தான் சினிமாவை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும் ஆனால் இந்த முடிவை தவிர்த்து வேறு எந்த வழியும் இல்லை என்றும் மற்றவர்களுக்கு வாக்களித்துவிட்டு அதை மீற விரும்பவில்லை என்றும் கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், உடல்நலம் பலகீனம் அடையும்போது படத்தின் இன்டர்வல் போல வாழ்க்கை பல ட்விஸ்ட்களை கொண்டுவரும் என்றும் கூறியிருந்தார். அல்போன்ஸ் புத்ரனின் இந்த பதிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சுதா கொங்கரா கோரிக்கை: ஆனால் அவர் இந்த தனது பதிவை உடனடியாக நீக்கியுள்ளார். அதனால் அவர் இந்தப் பதிவை நக்கலாக வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அல்போன்ஸ் புத்ரன் விரைவில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே அல்போன்ஸ் புத்ரன் தன்னுடைய இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எந்த விதத்திலாவது தன்னுடைய சினிமா பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்றும் பிரபல டைரக்டர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டுள்ளார்.

அல்போன்ஸ் புத்ரனுக்கு பாராட்டு: சூர்யாவின் சூரரைப் போற்று படம் மூலம் தன்னை இந்திய அளவில் நிரூபித்துள்ள சுதா கொங்கரா, அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு படத்தை இயக்கவுள்ளார். அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுதா கொங்கரா வெளியிட்டுள்ள பதிவில், அல்போன்ஸ் புத்ரனின் திரைப்படங்களை தான் மிகவும் மிஸ் செய்வேன் என்றும் தான் மிகவும் உடைந்து போன தருணங்களில் எல்லாம் அல்போன்ஸ் புத்ரனின் படங்கள் தன்னை மீட்க உதவியதாகவும் பாராட்டியுள்ளார்.

சுதா கொங்கராவை கவர்ந்த பிரேமம் படம்: குறிப்பாக பிரேமம் படம் தன்னுடைய பேவரைட் படங்களின் ஒன்று என்றும் சுதா கொங்கரா கூறியுள்ளார். இந்தப் படத்தை தான் அதிகமான முறை பார்த்துள்ளதாகவும் தன்னை மீண்டும் காதல்வயப்பட இந்தப் படம் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை அல்போன்ஸ் புத்ரன் தொடர வேண்டுமென்றும் தான் அதிலிருந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்வேன் என்றும் சுதா கொங்கரா மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











