Sudha Kongara Salary : பராசக்தி படத்திற்கு சுதா கொங்கரா வாங்கிய சம்பளம்!
சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9ந் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனத்தை பெறும் இப்படத்திற்கு இயக்குநர் சுதா கொங்கரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1960 ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை, செழியன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவரத தம்பியாக அதர்வா(சின்னதுரை) கதாபாத்திரத்திலும், ஸ்ரீலீலா ரேடியோ ஜேக்கியாக வருகிறார். அம்மா, அப்பா இல்லாததால் சிவகார்த்தியன், அதர்வாவை தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அரசு வேலையில் இருக்கும் அவர் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால், கல்லூரி மாணவனாக இருக்கும் சின்னதுரை (அதர்வா) வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார். அந்த நேரத்தில் இந்தியை எதிர்க்கும் போராட்டக்குழுக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதில், சின்னத்துரைக்கு என்ன ஆனது, சிவகார்த்திகேயன் எப்படி போராட்டக்காரராக மாறினார் என்பது தான் படத்தின் கதை.

இயக்குநர் சுதா கொங்கரா: டான் பிக்சஸ் தயாரித்து இருக்கும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 600 க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் படுதோல்வி என சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், பலர் இன்றைய தலைமுறையினருக்கு இந்தி திணிப்பு போராட்டத்தின் வலியை, உணர்வை சுதா கொங்கரா சேர்த்துள்ளார் என பலர் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், பராசக்தி படத்தை இயக்க இயக்குநர் சுதா கொங்கரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக சுதா கொங்கரா ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தின் ப்ரோமோஷனில் பேசிய சுதா கொங்கரா, ஆண் இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பெண் இயக்குநர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











