விஜய்யை வைத்து டைரக்ட் பண்ணா ஆக்ஷன் படம்தான்.. சுதா கொங்கராவின் விருப்பம் இதுதான்!

மும்பை : இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சுதா கொங்கரா.

தற்போது அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கிவருகிறார் சுதா கொங்கரா. இந்தப் படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா.

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து அடுத்தப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுதா கொங்கரா.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் மிகவும் சிறப்பாக அமைந்தது. கோபிநாத்தின் பயோ பிக்காக வெளியான இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க காரணமாக அமைந்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. முன்னதாக குத்துச்சண்டையை மையமாக வைத்து இவர் இயக்கியிருந்த இறுதிச்சுற்று படமும் சிறப்பாக அமைந்தது.

தேசிய விருதுகளை அள்ளிய படம்

தேசிய விருதுகளை அள்ளிய படம்

இவரது சூரரைப் போற்று சமீபத்தில் விருதுகளை அள்ளியது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்தது. கேக் வெட்டிக் கொண்டாடியது. இந்த டீமிற்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இந்லையில் தற்போது சுதா கொங்கரா இந்தியில் சூரரைப் போற்று படத்தை அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார்.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

இந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை முன்னிட்டு அவர் அடிக்கடி தனியாகவும் ஜோதிகாவுடனும் மும்பை சென்று வருகிறார். அவரை அடிக்கடி விமானநிலையத்தில் பார்க்க முடிகிறது. சூயா தற்போது சிவா இயக்கத்தில் தனது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி

மீண்டும் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி

இந்தப் படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக பயோ பிக்காக இருக்காது என்று முன்னதாகவே சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். சூர்யா 44 படமாக இந்தப் படம் அமையவுள்ளது. சூர்யா 42 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் படத்தை இயக்கினால் ஆக்ஷன்படம்தான்

விஜய் படத்தை இயக்கினால் ஆக்ஷன்படம்தான்

இதனிடையே சமீபத்திய மேடை பேச்சு ஒன்றில் நடிகர் விஜய்யை இயக்கினால் அது இறுதிச்சுற்றுப் படம்போல அமையுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உடனடியாக விஜய்யை வைத்து தான் ஆக்ஷன் படத்தை தான் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரது ஆக்ஷன் மற்றும் டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதா கொங்கராவின் விருப்பம்

சுதா கொங்கராவின் விருப்பம்

அடுத்ததாக சூர்யாவை வைத்து படமியக்கவுள்ள சுதா கொங்கரா, தொடர்ந்து அஜித்தை வைத்தும் படமியக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விஜய்யை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்கும் தனது விருப்பத்தை சுதா கொங்கரா தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X