போடு வெடிய! தியேட்டரில் ரிலீசாகும் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று! ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு!

மும்பை: கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்ணா பால முரளி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படம் கொரோனா காலகட்டத்தில் வெளியானதால் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் படத்தை அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சூர்யாவின் படங்களை எதிர்வரும் காலங்களில் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் எனவும் கூறியிருந்தனர். இப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை துவக்கிய கோ.ரா. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படமாகும். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில் கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, மோகன் பாபு, பூ ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் முதலில் வெளியான போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது.

Sudha Kongara Soorarai Pottru Movie Hindi Remake Suriya Akshay Kumar

அமேசான் பிரைமில் வெளியானதால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. 2021 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தையும் சுமுகமான முடிவை எட்டியது. ஆனால் அந்த காலகட்டத்திலும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் படத்தை தியேட்டரில் வெளியிடும் வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால் 2021 ஆம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க மட்டும் சத்யம் தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் அதிகம்.

Sudha Kongara Soorarai Pottru Movie Hindi Remake Suriya Akshay Kumar

சர்வதேச அங்கீகாரம்: இதுமட்டும் இல்லாமல் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. 93 வது ஆஸ்கார் விருதுகளுக்கான திரையிடலில் இந்த படம் திரையிடப்பட்டது. 78வது கோல்டன் குளோப் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் திரையிடப்பட்ட 10 இந்திய படங்களில் ஒன்றாக சூரரைப் போற்று திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

விருதுகளைக் குவித்த சூரரைப் போற்று: இந்த படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர் என ஐந்து தேசிய விருதுகளை இந்திய அரசு வழங்கியது. அதேபோல் விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் சிறந்த நடிகை சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் (ஊர்வசி) சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஆறு விருதுகளை இப்படம் வென்றது.

Sudha Kongara Soorarai Pottru Movie Hindi Remake Suriya Akshay Kumar

இந்தி ரீ மேக்: விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற சூரரைப் போற்றி திரைப்படத்தை சுதா கொங்கரா ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று அதாவது ஜூன் மாதம் 18ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படம் வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது அக்‌ஷய் குமார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததைக் காட்டிலும் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். காரணம் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் திரையரங்குகளில் வெளியாகின்றது என்பதுதான். சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீ மேக்கிற்கு படக்குழு சர்ஃபிரா என பெயரிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X