இந்த ஆண்டிலேயே புறநானூறு படத்தின் சூட்டிங்கை துவங்க திட்டமிடும் சுதா கொங்கரா.. அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்தப் படம் ஓடிடியில் வெளியான போதிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தேசிய விருதுகளையும் அள்ளியது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப்படம் பாலிவுட்டிலும் சூர்யா தயாரிப்பில் ரீமேக்காகியுள்ளது.
இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு புறநானூறு என்றும் பெயரிடப்பட்டது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பீரியட் படமாக திட்டமிடப்பட்ட இந்தப் படம் தற்போது டிராப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதா கொங்கராவின் அடுத்தப்படம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சுவைத்தப்படம் சூரரைப் போற்று. பயோபிக்காக உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு தன்னுடைய நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருந்தார் சூர்யா. படம் அபர்ணா முரளி, கருணாஸ், வடிவேலு உள்ளிட்டவர்களின் நடிப்பாலும் மேலும் மெருகூட்டப்பட்டிருந்தது. படம் ஓடிடியில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததுடன் தேசிய விருதுகளையும் அள்ளியது. இதையடுத்து மீண்டும் இந்த வெற்றிப்பட கூட்டணி இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு புறநானூறு என்ற பெயரும் அறிவிக்கப்பட்டது.
புறநானூறு படம்: படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக சுதா கொங்கரா தன்னுடைய பேட்டியொன்றில் கூறியிருந்தார். இதனிடையே இந்தப் படம் சூட்டிங் துவங்கப்படாமலேயே டிராப் ஆனது. இதற்கு சமூக வலைதளங்களில் பல காரணங்கள் யூகங்களாக வெளியாகின. இந்நிலையில் சுதா கொங்கராவின் அடுத்தப்படம் குறித்த கேள்வி எழுந்தது. தற்போது சூர்யா, இந்தப் படத்திற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் -சுதா கொங்கரா கூட்டணி?: இந்நிலையில் இந்தக் கதைக்களத்தை விட்டுவிட்டு சூர்யா, வேறொரு கதைக்களத்தை உருவாக்க சுதா கொங்கராவுடன் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இவை அனைத்துமே யூகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புறநானூறு கதையையே சுதா கொங்கரா படமாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் கேரக்டர்: இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த கேரக்டரில் அவர் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தை சூர்யாவே தயாரிக்கவிருந்த நிலையில் தற்போது புதிய தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











