Sundar C: தமிழ் சினிமாவில் நின்னு விளையாடும் சுந்தர் சி.. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் கமர்ஷியல் குதிரை
சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநர்கள், மூத்த நடிகர்கள் என பலருக்கும் எப்போதும் அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. அதுவும் சீரியஸான படங்களை இயக்குபவர்களுக்கு எப்போதும் திரைத்துறையில் தனி மரியாதை உள்ளது. ஆனால் என்னைப் போல கமர்ஷியல் படங்களை இயக்கும் இயக்குநர்களை யாருமே ஒரு பொருட்டாக கருதுவதில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார் தான் இயக்குநர் சுந்தர் சி. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டு இருக்கும் இவரது திரை வாழ்க்கை குறித்து டிவிட்டர் வாசி அஸ்வின் பாலா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது எக்ஸ் பதிவில், "80 & 90 களில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக 1990 ஆம் ஆண்டு "வாழ்க்கை சக்கரம்" மற்றும் "மூன்றாவது கண்" உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றினார் சுந்தர்.சி. 1995 ஆண்டு முறை மாமன் படம் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்தார் சுந்தர்.சி. முதலில் இந்த படத்தில் நடிக்க சரத்குமாரை அணுக, அது சில காரணங்களால் நடக்காமல் போக, உள்ளே வந்தார் ஜெயராம். குஷ்பு, கவுண்டமணி, ஜெயராம் கூட்டணியில் படம் ஹிட் அடித்தது.
1995 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் "முறை மாப்பிள்ளை". ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர்.சி தான் இயக்கவில்லை என கூறி அதிர்ச்சி அளித்தார். படத்தில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் விலக, வேறு ஒருவர் இயக்க படத்தில் பெயர் மட்டும் இருக்கும். தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்படாத வெற்றிப்பட கூட்டணி சுந்தர்.சி + கார்த்திக் கூட்டணி. முதல் முறையாக அவர்கள் இணைந்த படம் "உள்ளத்தை அள்ளித்தா" 1996 ஆண்டு வெளியாகி மெகா ஹிட்.. அதே ஆண்டு இவர் கொடுத்த மற்றொரு ஹிட் "மேட்டுக்குடி".
முதலில் "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் நடிக்க வேண்டியது தளபதி விஜய். ஆனால் அதன் பின் கார்த்திக் சுந்தர் சி கூட்டணியில் 7 படங்கள் வெளியானது. அழகான நாட்கள் தவிர மற்ற எல்லாமே வெற்றி படமாக அமைந்தது. படம் இயக்க ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் 5வது படத்தில் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு வர அதை தரமான சம்பவமாக செய்தார் சுந்தர் சி . அந்த சமயத்தில் அரசியல் ஆர்வத்தில் இருந்த ரஜினிக்கு இது பெரிய தொடக்க புள்ளியாக வெற்றிப் படமாகவும் அமைந்தது.

மனைவி குஷ்பு: தனது முதல் பட கதாநாயகியான நடிகை குஷ்பு அவர்களை 5 ஆண்டுகள் காதலித்து 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சுந்தர் சி. முக்கிய விஷயம் என்னவென்றால் இருவரும் பணியாற்றியது "முறை மாமன்" என்னும் ஒரே படம் தான் அப்போது தான் இவர்கள் இருவருக்கும். தனது முதல் படத்தில் இருந்தே தனது பல படங்களில் கதாநாயகியின் பெயர் "இந்து", எப்படி ஆதிக் அவர்களுக்கு "ரம்யா" வோ அந்த மாதிரி சுந்தர் சி படங்களில் இந்து.

காலம் கடந்த அங்கீகாரம்: காமெடி படங்களை இயக்கி கொண்டிருந்த சுந்தர் சி அவர்களுக்கு 2003 ஆண்டு கமல் அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்படி உருவான படம் தான் "அன்பே சிவம்" . கதை கமல் .. இயக்கம் சுந்தர்.. படம் தோல்வி அடைந்தாலும் இன்று பலரின் விருப்பப் படம் இது. வயது முதிர்வின் காரணமாக கவுண்டமணி படங்களில் நடிப்பதை குறைக்க தனது படங்களில் வடிவேலு அவர்களை பயன்படுத்த ஆரம்பித்தார் சுந்தர்.சி .. இந்த கூட்டணி முதலில் இணைந்த படம் 2003 ஆண்டு வெளியான "வின்னர்" ,படமும் ஹிட், குறிப்பாக வடிவேல் நடித்த கைப்புள்ள வேடம் ஹிட்.இந்த கூட்டணி சமீபத்தில் வெளியான கேங்கர்ஸ் உட்பட 7 படங்களில் இணைந்து பணியாற்றியது. குறிப்பாக "கைப்புள்ள" , "வக்கீல் வெடிமுத்து" , "ஸ்டைல் பாண்டி" மற்றும் "வீரபாகு " கதாபாத்திரங்கள் செம்ம பிரபலம்.
நடிகர் அவதாரம்: 2006 ஆண்டு "தலைநகரம்" படம் மூலமாக ஹீரோ அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. அதனால் இயக்கத்திற்கு சிறிது ஓய்வு விட்டார். ஹீரோவாக நடித்த முதல் 3 படங்களும் ஹிட் ஆக இயகத்தை மறந்தே போனார். 2010 இல் நகரம் மறுபக்கம் மூலம் நடிகர் இயக்குநர் ஆனார். 2012 ஆண்டு "கலகலப்பு" படத்தின் மூலம் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுத்தார். படம் மிகப்பெரிய வெற்றி. இந்த படத்தின் மூலம் கூட்டணி அமைத்தது சுந்தர் சி சந்தானம் இணை. தொடர்ந்து பல படங்களில் இணைந்து நம்மை சிரிக்கவும் வைத்தது.

கமர்ஷியல் குதிரை: கடந்த 30 ஆண்டுகளில் 38 படங்களை இயக்கி இன்று இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கு இணையாக இப்போது கூட 4 படங்களை ஒரே நேரத்தில் இயக்கி கொண்டிருக்கும் சுந்தர் சி நாம் கொண்டாட தவறிய இயக்குநர்... இவருடன் மற்றும் இவருக்கு பின் வந்த பலரும் காணாமல் போக இந்த குதிரை இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது" என அஸ்வின் பாலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வருத்தம்: உண்மையாலுமே சுந்தர் சி கொண்டாடப்பட வேண்டியவர் தான். ஆனால் தமிழ் சினிமாவோ ரசிகர்களோ அவரைக் கொண்டாடுவதில்லை. ஆனாலும் தனக்கு போதுமான அங்கீகாரம் இல்லாததை நினைத்து அவருக்குள் வருத்தம் இருந்தாலும் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் கமர்ஷியல் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இன்னும் பல கமர்ஷியல் ஹிட் கொடுக்க வாழ்த்துகள் இயக்குநர் சுந்தர் சி.


Click it and Unblock the Notifications











