மீண்டும் இணையும் கலகலப்பு 2 கூட்டணி.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை : கலகலப்பு 2 படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் இணைந்து நடித்திருந்தார் ஜீவா.

இந்நிலையில் அரண்மனை 3 படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் இயக்கப்படவுள்ளது.

நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தவர். காமெடி, ஹீரோயிசம் என கலந்துக் கட்டி அடிப்பவர். சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும்வண்ணம் இவரது நடிப்பு இருக்கும். பல காமெடி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சீரியசான படங்களிலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

கலகலப்பு 2 படம்

கலகலப்பு 2 படம்

இதனிடையே கலகலப்பு 2 படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், அஞ்சலி உள்ளிட்டவர்களுடன் இவர் நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் பெரிய மேன்ஷனை கட்டியாளும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

சுந்தர் சியுடன் கூட்டணி

சுந்தர் சியுடன் கூட்டணி

கலகலப்பு படம் கொடுத்த வெற்றியை அடுத்து வெளியான கலகலப்பு 2 படமும் சிறந்த வெற்றியை சுந்தர் சிக்கு கொடுத்தது. இதனிடையே தற்போது அவரது டைரக்ஷனில் திரையரங்குகளில் வெளியாகி அரண்மனை 3 படம் சக்சஸ்புல்லாக ஓடி வருகிறது.

 அரண்மனை 3 படம்

அரண்மனை 3 படம்

ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. சுந்தர் சி மற்றும் குஷ்பூவின் அவ்னி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்த நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட்டது.

சுந்தர் சியின் அடுத்த படம்

சுந்தர் சியின் அடுத்த படம்

இதையடுத்து ஜீவா மற்றும் ராஷி கண்ணா லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார் சுந்தர் சி. படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப் படம் உருவாகவுள்ளது.

 டிசம்பரில் படப்பிடிப்பு

டிசம்பரில் படப்பிடிப்பு

டிசம்பர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் தொடர்ந்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுந்தர் சி -ஜீவா மேஜிக் கலகலப்பு 2 படத்தில் சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது இந்த புதிய படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X