குஷ்பூவுக்கு கோயில் கட்டியதை பார்த்தபோது சுந்தர் சி ரியாக்ஷன் என்ன தெரியுமா?

சென்னை : நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட்டில் செயல்பட்டு வருகிறார் சுந்தர் சி. அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகராக மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்துவரும் இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இதனிடையே காபி வித் காதல் என்ற படத்தில் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் காமெடி கலாட்டவுடன் களமிறங்கி வருகிறார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

சுந்தர் சியின் பன்முகத் திறமை

சுந்தர் சியின் பன்முகத் திறமை

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் சுந்தர் சி. தொடர்ந்து இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சுந்தர் சி, அரண்மனை படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பேய் படங்களில் காமெடியை புகுத்திய இயக்குநர்களில் இவரும் ஒருவர்

காமெடி படங்கள்

காமெடி படங்கள்

காமெடிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, தீயாய் வேலை செய்யணும் குமாரு போன்ற காமெடி களங்களில் இவரது படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்த நிலையில், தற்போது காபி வித் காதல் என்ற படத்தின்மூலம் மீண்டும் காமெடியை கையில் எடுத்துள்ளார்.

காபி வித் காதல் படம்

காபி வித் காதல் படம்

இந்தப் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், டிடி, ஜெய், அமிர்தா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் முன்னதாகவே வெளியாக இருந்த நிலையில், முன்னணி படங்களில் வெளியீட்டையொட்டி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

பிரமோஷன்களில் படக்குழு

பிரமோஷன்களில் படக்குழு

இதனிடையே வரும் நவம்பர் 4ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுந்தர் சி உள்ளிட்ட படக்குழுவினர் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பேட்டியில் சுந்தர் சி, குஷ்பூ, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

குஷ்பூவிற்கு கோயில்

குஷ்பூவிற்கு கோயில்


அதில் சுந்தர்சியிடம் குஷ்பூவிற்கு கோயில் கட்டியது, அவரது பெயரில் இட்லி உருவானது உள்ளிட்டவற்றால் அவருக்கு பொசசிவ் உணர்வு ஏற்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த சுந்தர் சி, தான் குஷ்பூவை காதலிப்பதற்கு முன்னதாகவே இவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டதாகவும் அதனால தான் பொசசிவ்வாக உணரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

வட நாட்டை சேர்ந்தவரான குஷ்பூ கோலிவுட்டில் பல படங்களில் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார். கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஹீரோயினாக நடித்த இவர், தற்போது தயாரிப்பாளர், டிவி ஆங்கர், நடிகை என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X