Director Sundar C: தாமதமாகும் அரண்மனை 4 ரிலீஸ்.. பாலிவுட்டில் என்ட்ரியாகும் சுந்தர் சி!
சுந்தர் சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தடுமாறி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளதாக கூறப்பட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இதிலிருந்து விலகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தொடர்ந்து அடுத்த படத்திலும் கமிட் ஆக முடியாத நிலையில் சுந்தர் சி உள்ளதாகவும் இதையடுத்து அவர் பாலிவுட்டில் தனது புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல ஹீரோ அக்ஷய் குமாருடன் இணைந்து சுந்தர் சி அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் சுந்தர் சி: முறைமாமன் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் சுந்தர் சி. பிரபல இயக்குனர். நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்ட இவர், முறை மாமன் படத்தின் மூலம் கடந்த 1995ம் ஆண்டில் தமிழில் என்ட்ரி கொடுத்தார். நகைச்சுவை தூக்கலாக வெளியான இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் ஜெயராம், மனோரமா, கவுண்டமணி, குஷ்பூ என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
ஹீரோவாக என்ட்ரி: தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டில் சுராஜ் இயக்கத்தில் தலைநகரம் படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தது. தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்ற இயக்குனர்களுடன் இணைந்தும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார் சுந்தர் சி. அவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் 25வது படமாக உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார்.
அரண்மனை 4 படம்: அவருடன் இணைந்து தமன்னா மற்றும் ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஷூட்டிங் நிறைவடைந்து கடந்த ஜனவரி மாதம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியானதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. முன்னதாக இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட உள்ளதாகவும் கூறப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் அரண்மனை 4 படம் வெளியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரண்மனை 4 ரிலீசில் சிக்கல்: இந்நிலையில் அரண்மனை 4 படம் வெளியாவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடவிருந்த நிலையில் அந்த நிறுவனம் தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தமிழில் அடுத்த படத்தை கமிட் செய்வதிலும் சுந்தர் சிக்கு சில சிக்கல்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அடுத்ததாக பாலிவுட்டில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் என்ட்ரி: பாலிவுட்டில் பிரபல நடிகர் அக்ஷய் குமாருக்கு சுந்தர் சி கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பெரும்பாலும் அரண்மனை படத்தின் ஒரு பாகத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அக்ஷய்குமார் லீட் கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட்டின் நாயகன் பாபி தியோலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











