Director Sundar C: மூக்குத்தி அம்மனை இயக்கும் பிரபல இயக்குநர்.. அப்ப ஆர்ஜே பாலாஜி?
சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். அரசியல் நய்யாண்டி கலந்து வெளியான இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
மூக்குத்தி அம்மன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் குவிந்த நிலையில் அடுத்ததாக மாசாணி அம்மன் என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி திரிஷா லீட் கேரக்டரில் நடிக்க இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படமும் உருவாக உள்ளதாகவும் வேல்ஸ் நிறுவனம் அதை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

மூக்குத்தி அம்மன் படம்: ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியானது மூக்குத்தி அம்மன் படம்/ இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து மாஸ் காட்டிருந்தார். அவருடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் அரசியல் நையாண்டியுடன் மக்களின் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பேசிய நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்தனர். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் திரிஷா: ஆனால் அடுத்ததாக திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரத்தில் நயன்தாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுந்தர் சி: விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரண்மனை 4 படத்தை கொடுத்திருந்தார் சுந்தர் சி. அவரது நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்தப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருந்தது. இந்த படத்திலும் கிளைமாக்சில் சாமி சென்டிமென்ட்டை மையமாக வைத்து பல காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதேபோல கிளைமாக்சிலும் கோயில் திருவிழாவில் குஷ்பூ மற்றும் சிம்ரன் இணைந்து மாஸான நடனத்தையும் கொடுத்திருந்தனர். தீமைக்கு எதிராக அம்மன் களத்தில் இறங்குவதாக இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காணப்பட்டது.
மூக்குத்தி அம்மன் 2 படம்: இந்நிலையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவர் தனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் கலகலப்பு 3 திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த இரு படங்களில் எந்த படத்தை அவர் முதலில் இயக்குவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆர்ஜே பாலாஜி தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் படங்களில் அரசியல் நையாண்டியை கலந்து சிறப்பான திரைக்கதையை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை அதே போன்ற ஜானரில் சுந்தர் சி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











