அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு... உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி!

சென்னை : இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இயக்கம் ப்ளஸ் நடிப்பில் உருவாகியுள்ளது அரண்மனை 3 படம்.

இந்தப் படம் உலகளவில் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையொட்டி நடைபெற்ற ப்ரஸ் மீட்டில் உதயநிதி ஸ்டாலின் குறித்து இயக்குநர் சுந்தர் சி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்கம் ப்ளஸ் நடிப்பு

இயக்கம் ப்ளஸ் நடிப்பு

இயக்கம் ப்ளஸ் நடிப்பு என பட்டையை கிளப்பிவருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 படங்கள் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. பேய்ப்படங்களில் காமெடியை புகுத்திய பெருமை சுந்தர் சியையே சாரும்.

14ம் தேதி அரண்மனை 3 ரிலீஸ்

14ம் தேதி அரண்மனை 3 ரிலீஸ்

இந்நிலையில் அரண்மனை படத்தின் மூன்றாவது பாகத்தை தற்போது எடுத்துள்ளார் சுந்தர் சி. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது. வரும் 14ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

படத்தில் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீசையொட்டி நடைபெற்ற ப்ரஸ் மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் சி படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

சவாலான படம்

சவாலான படம்

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக்கின் இழப்பு மிகவும் பெரியது என்று தெரிவித்துள்ள அவர் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது மிகவும் சவாலானது என்று தெரிவித்துள்ளார். அதற்கு சிறப்பான படக்குழு அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 உதயநிதி குறித்து மகிழ்ச்சி

உதயநிதி குறித்து மகிழ்ச்சி

இந்தப் படத்தின் முதல் பாகத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த 3வது பாகத்தையும் பிரம்மாண்டமான அளவில் வெளியிடுகிறது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுந்தர் சி, முதல் பாகத்தை பார்த்து அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று உதயநிதி நம்பிக்கை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

உதயநிதி பாராட்டு

உதயநிதி பாராட்டு

அதேபோல இந்த 3வது பாகத்தையும் பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததாகவும் சுந்தர் சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகன் ஆர்யா குறித்தும் சுந்தர் சி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X