2 ஆயிரம் கலைஞர்கள்.. 6 மாத உழைப்பு.. மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவு.. நெகிழ்ந்த சுந்தர் சி!
சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியான தகவலை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜேர் பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இந்தப் படம் 2020ம் ஆண்டு நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதில் அம்மனாக நயன்தாரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஆர்ஜே பாலாஜி கூறிய நிலையில், மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மூக்குத்தி அம்மன் 2: ஆனால், மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், சுந்தர் சி இயக்க இருப்பதாகவும். அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் தடபுடலாக கோவில் போல செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. அந்த பூஜைக்கான செலவே ஒரு கோடி என்றும், படத்தின் பட்ஜெட் 100 கோடி, பான் இந்திய திரைப்படமாக இப்படடிம் உருவாகி உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேர்ஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகைகள் நயன்தாரா, சினேகா, ரெஜினா கேசண்ட்ராட் , ஊர்வசி , அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோரும் நடிகர்கர் யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்தது: இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவுப் பெற்றதை வீடியோவாக படக்குழு வெளியிட்டு, படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகுமென அறிவித்துள்ளது. மேலும், சுமார் 2,000 கலைஞர்களுடன், 6 மாதம் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவில் குஷ்பு, நயன்தாரா, சினேகா, ஊர்வசி ஆகியோர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











