Director Sundar C: பேயா இருந்தாலும் கவர்ச்சியா வந்தாதான்.. சுந்தர் சி கொடுத்த அரண்மனை 5 பட அப்டேட்!

சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் மாஸ் காட்டி வருபவர் சுந்தர் சி. இயக்குநராகவே இவரது பயணம் கோலிவுட்டில் துவங்கி, தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகம் காட்டியது. இவரது இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த மாதத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

அரண்மனை 4 படத்தில் சுந்தர் சியே நாயகனாக நடித்திருந்தார். படத்தில் அவரது சகோதரியாக தமன்னா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராஷி கண்ணாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

Sundar C Tamannaah tamil cinema

இயக்குநர் சுந்தர் சி: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டிவரும் சுந்தர் சி, தன்னுடைய மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூவுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். கடந்த மாதத்தில் சுந்தர் சி நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகிய அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது. இந்தப்படத்திற்கு சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். படத்தின் முந்தைய பாகமான அரண்மனை 3 படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், அரண்மனை 4 படம் சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை அணுகியது.
'
பேய் படமாக இருந்தாலும்: பேய் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் கவர்ச்சி தூக்கலாகவே காணப்பட்டது. படத்தில் சுந்தர் சியின் சகோதரியாக அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார் தமன்னா. இருந்த போதிலும் ராஷி கண்ணாவுடன் இணைந்து அவரும் கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் பேய் படங்களுக்கு கவர்ச்சி அவசியமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சுந்தர் சி, பேயாக இருந்தாலும் அதுவும் கவர்ச்சியாக வந்தால்தான் இங்கு வியாபாரமே என்று தெரிவித்துள்ளார். ஒரேபோன்று ஹாரரை மட்டுமே வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்றும் படம் கலர்புல்லாக இருப்பதையே ரசிகர்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரண்மனை 5 படம்: இந்தப் படத்தின் சக்சஸையொட்டி இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் பதிலளித்துள்ள சுந்தர் சி அரண்மனை 5 கண்டிப்பாக உருவாகும் என்றும் அதிலும் கவர்ச்சி இருக்கும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அரண்மனை 4 படத்தின் ரிலீசின்போது இந்தப் படம் வெற்றியடைந்தால்தான் அரண்மனை 5 படத்தை உருவாக்குவேன் என்று சுந்தர் சி கூறியிருந்தார். தற்போது அரண்மனை 4 படம் வெற்றியடைந்து 100 கோடி கிளப்பில இணைந்துள்ளது. இதனால் கண்டிப்பாக அரண்மனை 5 படத்தை சுந்தர் சி உருவாக்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: அடுத்ததாக மீண்டும் தமன்னாவுடன் இணைந்து ஹாரர் படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இதேபோல கலகலப்பு 3 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்தப் படங்களை நிறைவு செய்துவிட்டு மீண்டும் அரண்மனை 5 படத்தின் வேலைகளில் சுந்தர் சி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4 படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த நிலையில், அவரது கால்ஷீட் இல்லாததால் சுந்தர் சியே ஹீரோவாக களமிறங்கினார். இதனிடையே அரண்மனை 5 படத்தில் அவரே ஹீரோவாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X