Sundar C: இந்த ஆண்டிலேயே சங்கமித்ரா சூட்டிங் ஸ்டார்ட்.. சுந்தர் சி உற்சாகம்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சியின் அரண்மனை 4 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பட குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் 3 பாகங்கள் அடுத்தடுத்து ரிலீசான சூழலில் நாளைய தினம் 4வது பாகம் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தமிழிலும் தெலுங்கிலும் நடத்தப்பட்டுள்ளன. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சுந்தர்சி, தமன்னா, ராஷி கண்ணா மட்டுமில்லாமல் குஷ்பூவும் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

Director Sundar C opens up about his long pending movie Sangamithra in his recent

அரண்மனை 4 படம்: நடிகர் சுந்தர் சி ஆண்டுகளை கடந்து தன்னை மிகப் பெரிய ஹீரோவாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியும் குஷ்பூவுடன் இணைந்து தயாரித்தும் வருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ள சூழலில் இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி: அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த சூழலில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து தானே ஹீரோவாக களமிறங்கினார் சுந்தர் சி. இந்த படத்தில் அவர் வழக்கறிஞராக தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு நியாயம் தேடுபவராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருடைய தங்கையாக நடிகை தமன்னா அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சங்கமித்ரா குறித்து சுந்தர்.சி: படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். முன்னதாக வெளியான அரண்மனை 1 மற்றும் 2 படங்கள் மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற சூழலில் அரண்மனை 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நாளைய தினம் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக பேசிய சுந்தர் சி தன்னுடைய இயக்கத்தில் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சங்கமித்ரா படம் குறித்தும் பேசியியுள்ளார்.

இந்த ஆண்டில் சங்கமித்ரா: இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியிலேயே துவங்கவுள்ளதாக சுந்தர் சி பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பான கதைகளத்துடன் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படம் வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X