Director Sundar C: சுந்தர் சியுடன் திருமணத்திற்கு நோ சொன்ன குஷ்பூ.. ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அரண்மனை 4 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசையொட்டி கடந்த சில தினங்களாகவே சுந்தர் சி உள்ளிட்ட பட குழுவினர் அடுத்தடுத்து மிகச் சிறப்பான ப்ரொமோஷன்களை கொடுத்து வருகின்றனர்.
தன்னுடைய சொந்த வாழ்க்கை, தன்னுடைய மனைவி குஷ்பூ, மகள்கள் மற்றும் அரண்மனை 4 படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை சுந்தர் சி தன்னுடைய பேட்டிகளில் அடுத்தடுத்து பேசி வருகிறார். இவை அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. மேலும் தமன்னா, ராஷி கண்ணா, குஷ்பூ உள்ளிட்டவர்களும் பிரமோஷன்களை கொடுத்து வருகின்றனர்.

அரண்மனை 4 படம்: நடிகர் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அரண்மனை 4 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களை கடந்த சில தினங்களாக சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, குஷ்பூ உள்ளிட்டவர்கள் இணைந்து படம் குறித்த பல சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுந்தர் சியும் தன்னுடைய வாழ்க்கை, குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அடுத்தடுத்து பேட்டிகளை அளித்து வருகிறார்.
சுந்தர் சி -குஷ்பூ தம்பதி: முறைமாமன் படம் மூலம் இவர் முதல் முறையாக குஷ்புவை தன்னுடைய படத்தில் இணைத்திருந்தார். தொடர்ந்து குஷ்புவை வைத்து அடுத்தடுத்த படங்களை ஹிட் படங்களாக கொடுத்தார் சுந்தர் சி. இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒருவர் நடிகையாகவும் மற்றொருவர் தயாரிப்பாளராகவும் மாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
அரண்மனை 4 பட ப்ரமோஷன்கள்: நடிகர் சுந்தர் சி முன்னதாக இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நடிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த படங்களிலும் அவர் அடுத்தடுத்து தன்னை நடிகராக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் தங்கையாக தமன்னாவும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கா பேசியுள்ள சுந்தர் சி, தானும் குஷ்பூவும் காதலித்து வந்த சூழலில் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாக வெளிப்படுத்தியுள்ளார்.
திருமணத்திற்கு நோ சொன்ன குஷ்பூ: ஆனால் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பெறும் வாய்ப்பு குஷ்புவிற்கு இல்லை என்றும் அவரது உடல்நலனில் பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்து கண்கலங்கிய நடிகை குஷ்பூ தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தன்னிடம் வருத்தத்துடன் தெரிவித்ததாகவும் ஆனால் கடவுள் புண்ணியத்தில் தங்களுக்கு அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும் சுந்தர் சி தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சுந்தர் சி மற்றும் குஷ்பூ இருவரும் உற்சாகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











