எல்லாரும் கலாய்ப்பாங்கன்னு நினைச்சேன்.. மதகஜராஜா பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சுந்தர் சி ஓபன்!
நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மத கஜ ராஜா கடந்த 2012ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்டு 2013ம் ஆண்டிலேயே ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் அடுத்தடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீசிலிருந்து பின்வாங்கியது.
இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது பொங்கலையொட்டி மத கஜ ராஜா படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தன்னுடைய கேரியரிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று விஷால் கூறியுள்ள நிலையில், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வெகு சிறப்பாக அமைந்துள்ளதாக சுந்தர் சி உற்சாகம் தெரிவித்துள்ளார்.

மதகஜராஜா படம்: நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மத கஜ ராஜா படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 2012ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில் 2013ம் ஆண்டில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் அடுத்தடுத்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீசிலிருந்து பின்வாங்கியது. தன்னுடைய கேரியர் பெஸ்ட்டாக தான் நினைத்த இந்தப் படம் தற்போது ரிலீசாவது குறித்து நடிகர் விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விஷால் உற்சாகம்: விஷாலுக்கு அடுத்தடுத்த படங்கள் கைக்கொடுக்காத நிலையில் அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி சிறப்பாக அமைந்தது. அடுத்ததாக வெளியான ரத்னம் படமும் வரவேற்பை பெறாமல் சொதப்பியது. இந்நிலையில் வரும் பொங்கலையொட்டி இன்னும் சில தினங்களில் மத கஜ ராஜா படம் வெளியாகவுள்ளது குறித்து விஷால், சுந்தர் சி உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால், சந்தானம் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள 20 நிமிட காட்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் முன்னதாக சுந்தர் சி பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
கலாய்ப்பாங்கன்னு நினைச்சேன்: இந்நிலையில் தற்போது நடந்துள்ள இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் படத்தின் ரிலீசை அறிவித்தபோது தான் மிகவும் பயந்ததாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்றும் சோசியல் மீடியாவில் கலாய்ப்பார்களே என்றும் தான் யோசித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பு தன்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் மொத்த படக்குழுவினரும் சந்தோஷ சர்ப்ரைஸ் ஆகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நண்பர்களின் கதை: இந்தப் படத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில் மீண்டும் சந்திப்பேன் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை பார்த்து திருப்பூர் சுப்ரமணியன் மிகப்பெரிய அளவில் பாராட்டி பேசியதாகவும் சுந்தர் சி குறிப்பிட்டுள்ளார். இநத்ப் படம் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆனது தெரியவில்லை. ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் மூன்று நண்பர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களத்தை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











