Director Sundar C: கலகலப்பு 3 படத்திற்கு திட்டமிடும் சுந்தர் சி.. அட ஹீரோ இவரா.. சூப்பர்தான்!
சென்னை: பிரபல இயக்குனர் சுந்தர் சி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான அரண்மனை 3 மற்றும் காபி வித் காதல் படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவரது அரண்மனை 4 படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்று படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி இந்தப்படம் ரிலீசாகும் என்று முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பினர் தள்ளி வைத்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் வெளியான கலகலப்பு மற்றும் 2 படத்தின் மூன்றாவது பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்த நிலையில் தற்போது இதன் மூன்றாவது பாகம் குறித்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி காமெடியை பிரதானமாகக் கொண்டு அடுத்தடுத்த படங்களை கொடுத்து வரும் நிலையில் இந்தப் படமும் காமெடி தூக்கலாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் சுந்தர் சி: இயக்குனர் சுந்தர் சி காமெடியை பிரதானமாகக் கொண்டு அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்காகவே அவரது படங்கள் சூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது அரண்மனை சீரிஸ் படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தன. இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வரும் சுந்தர் சி, நடிகை குஷ்பூவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒருவர் நடிகையாகவும் மற்றொருவர் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரண்மனை 4 படம்: இந்நிலையில் சுந்தர் சியின் அரண்மனை 4 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது. மூன்றாவது பாகம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் நான்காவது பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் தூண்டி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த 2012ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கலகலகப்பு 3 படத்தை திட்டமிடும் சுந்தர் சி: கலகலப்பு படத்தின் இரண்டாவது பாகம் ஜெய் மற்றும் ஜீவா நடிப்பில் கடந்த 2018 இல் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதனிடையே தற்போது கலகலப்பு 3 படத்தை திட்டமிட்டு வரும் சுந்தர் சி, இந்த படத்தில் நடிகர் கவினை லீட் கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் டாடா மற்றும் லிப்ட் படங்களின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்போது மிகவும் பிஸியான நடிகராக மாறியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஸ்டார் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் நடித்து வரும் நிலையில் கவினின் கால்ஷீட் கிடைக்குமா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் கவின்: கோலிவுட்டில் அடுத்த மாஸ் ஹீரோவாகியுள்ளார் கவின். இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து அவரது நடிப்பில் ஸ்டார் உள்ளிட்ட 3 படங்கள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து முடித்துள்ள கவின், அடுத்ததாக கவின் 6 மற்றும் கவின் 7 படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சுந்தர் சி படத்தில் இணைந்தால் அவரது காமெடி ஷேடும் ரசிகர்களுக்கு கிடைக்க வாய்ப்பாக அமையும். நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் காமெடியை மையமாக வைத்தே தங்களது படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கவினுக்கு சுந்தர் சி கூட்டணி சிறப்பாக அமையும்.


Click it and Unblock the Notifications











