Kalakalappu 3: கலகலப்பு 3 படத்திற்கு தயாராகும் சுந்தர் சி.. ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சுந்தர் சி. சமீபத்தில் இவரது இயக்கம், தயாரிப்பு, மற்றும் நடிப்பில் வெளியானது அரண்மனை 4 படம். இந்த படத்தில் சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூலில் சிறப்பாக அமைந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் சுந்தர் சியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கி தயாரிக்கவுள்ளார் சுந்தர் சி. முன்னதாக இந்த படத்தின் இரு பாகங்கள் வெளியாகி சிறப்பான வெற்றியை குவித்த சூழலில் தற்போது படத்தின் மூன்றாவது பாகம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விமல் மற்றும் சிவா இணையவுள்ள சூழலில் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ள நடிகை குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி: இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமாகி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை பல்வேறு தளங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் இயக்குனர் சுந்தர் சி. சமீபத்தில் இவரது இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது அரண்மனை 4 படம். தயாரிப்பாளராகவும் இந்தப் படம் சுந்தர் சிக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. படத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள சூழலில், தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்களும் நடித்து படத்திற்கு சிறப்பை சேர்த்துள்ளனர். குஷ்பு, சிம்ரன் ஆகியோர் ஒரு பாடலுக்கு நடனமாடி படத்தின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளனர்.
கலகலப்பு 3 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுந்தர் சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ளது கலகலப்பு 3 படம். அரண்மனை படத்தை போலவே கலகலப்பு படமும் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி சுந்தர் சி இயக்கத்தில் சிறப்பான வெற்றியை கொடுத்தன. கடந்த 2012ம் ஆண்டில் கலகலப்பு படம் ரிலீசானது. இந்த படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற சூழலில் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படமும் சிறப்பாக அமைந்தது.
கலகலப்பு 3 படத்தின் நாயகி: இந்நிலையில் அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கும் வேலைகளில் சுந்தர் சி ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் விமல் மற்றும் சிவா ஹீரோக்களாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நாயகியாக நடிகை வாணி போஜன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் சுந்தர் சி நடிப்பாரா என்பது குறித்த அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலகலப்பு 3 படத்தில் கவின் இல்லை: ன்னதாக கலகலப்பு 3 படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை சுந்தர் சி மறுத்திருந்தார். உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து கலகலப்பு 3 படத்தில் கவின் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்களுக்கு அவர் எண்ட் கார்ட் போட்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் விமல் மற்றும் சிவா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முதல் பாகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களுடன் நடிகர் சந்தானமும் படத்தின் வெற்றிக்கு சிறப்பான காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











