Director Sundar C: நான் பெயிலியர் நடிகன்தான்.. இயக்குநர் சுந்தர் சி ஓபன்!
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முக திறமையுடன் காணப்படும் சுந்தர் சி நடிப்பில் மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுத்துள்ளது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில் அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி.
கலகலப்பு 3 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அடுத்ததாக தமன்னா -வடிவேல் கூட்டணியில் ஹாரர் படம் ஒன்றையும் இயக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் அவர் நடிப்பாரா என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் முன்னதாக சுந்தர் சி கொடுத்த பேட்டியில் தான் பெயிலியர் நடிகர் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி: இயக்குனராக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த சுந்தர் சி தொடர்ந்து முறை மாமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களில் காமெடி சற்று தூக்கலாகவே இருக்கும். இதுவே அவரது படங்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இடையில் சில படங்களில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடித்தார். தொடர்ந்து தலைநகரம், வீராப்பு, சண்டை ஆகிய மூன்று படங்களை வெற்றி படங்களாக கொடுத்திருந்தார். இதையடுத்து இவருக்கு அதிகமான படங்கள் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து தனக்கு வந்த ஹீரோ வாய்ப்புகளை எல்லாம் மறுக்காமல் ஒப்புக்கொண்டார் சுந்தர் சி.
பெயிலியர் ஆக்டர்: இந்நிலையில் ஹீரோவாக சுந்தர் சி நடிப்பில் வெளியான அடுத்தடுத்த எட்டு படங்கள் ஃபிளாப் படங்களாக அமைந்தன. இதையடுத்து தொடர்ந்து மீண்டும் இயக்குனராகவே தன்னுடைய கேரியரை தொடர்ந்தார் சுந்தர் சி. இது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் சுந்தர் சி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தான் ஹீரோவாக ஜெயிக்கவில்லை என்றும் தான் ஒரு பெயிலியர் ஆக்டர் என்றும் அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த தோல்விகள்: தலைநகரம் உள்ளிட்ட மூன்று படங்களின் வெற்றியை தொடர்ந்து ஸ்கூல் பையனுக்கு ஏப்ரல் மாத லீவு கிடைக்கும் சந்தோஷத்தை போல அதே உற்சாகத்துடன் தான் ஹீரோவாக கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒப்புக் கொண்டதாகவும் அவர்கள் சொன்னதற்கு ஏற்ப இயக்குநர்களின் ஹீரோவாக நடித்ததாகவும் இதனால் தொடர்ந்து 8 படங்கள் பிளாப் என்றும் ஹீரோவாக தொடர்ந்து சினிமாவில் நிலைக்க முடியாததற்கு இதுவும் காரணம் என்றும் தற்போது சுந்தர் சி மனம் திறந்துள்ளார். எட்டு படங்களின் பிளாப்பை தொடர்ந்து தான் மீண்டும் இயக்கத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரண்மனை 4 படம்: இயக்கத்தில் தனக்கு ஒரு கம்பர்ட் சோன் இருந்ததாகவும் சுந்தர் சி மேலும் குறிப்பிட்டார். அவ்வாறு தான் இயக்கிய படம் தான் கலகலப்பு என்றும் அந்தப் படம் தனக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்ததாகவும் சுந்தர் சி கூறியுள்ளார். அடுத்தடுத்த அரண்மனை படங்களில் சுந்தர் சி ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த சுந்தர் சி, சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் முழுமையாக சிங்கிள் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரும் இணைந்து நடித்த நிலையில் இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது.
100 கோடி கிளப் படம்: அரண்மனை 4 படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. ஆயினும் தனக்கு இயக்கம் தான் சிறப்பாக வரும் என்று அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மீண்டும் அடுத்ததாக கலகலப்பு 3 மற்றும் தமன்னாவுடன் இணைந்து ஒரு ஹாரர் படம் ஆகியவற்றை இயக்க உள்ளார் சுந்தர் சி. இதில் எந்தப் படத்தை முதலில் இயக்குவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











