Aranmanai 4 movie: மீண்டும் தமன்னாவுடன் இணையும் சுந்தர் சி.. எல்லாம் அரண்மனை 4 கொடுத்த வசூல்!
சென்னை: நடிகர், இயக்குனர். தயாரிப்பாளர் சுந்தர் சியின் அரண்மனை 4 படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது/ படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள சூழலில் இந்த படத்தில் நடித்திருந்த சுந்தர் சி. தமன்னா மற்றும் ராசி கண்ணாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன/
குறிப்பாக அரண்மனை 4 படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக தமன்னா அமைந்துள்ளார் அவரது அழுத்தமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் சியுடன் தமன்னா மீண்டும் ஹாரர் படத்தில் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயம் ரவியின் பிரதர் படத்தை தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகத் திறமையுடன் வலம்வரும் சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அரண்மனை 4 படம் வெளியாகி நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் மூன்றாவது பாகம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக தமன்னா அமைந்துள்ளார்,
அரண்மனை 4 படம்: அரண்மனை 4 படத்தில் சுந்தர் சியின் சகோதரியாக தமன்னா நடித்துள்ள சூழலில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. படத்தில் சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த சூழலில் இந்த படத்தின் பாடல்களும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. இந்த படத்தின் கிளைமேக்ஸ் பாடலில் குஷ்பூ மற்றும் சிம்ரன் இணைந்து ஆட்டம் போட்டதும் படத்திற்கு ஒரு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் சி மற்றும் தமன்னா கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படமும் ஹாரர் படமாகவே உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் சுந்தர் சி -தமன்னா கூட்டணி: விரைவில் சுந்தர் சி மற்றும் தமன்னா கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ள நிலையில் அடுத்ததும் சுந்தர் சி ஹாரர் கதைக்களத்தை கையிலெடுக்கவுள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இயக்குர் சிவாவின் உதவி இயக்குநர் பூபாலன் தமன்னாவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் அந்தப் படத்தை தான் தற்போது சுந்தர் சி இயக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கம்: பூபாலனிடம் இருந்து இந்தக் கதையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் இந்தக்கதை சுந்தர் சிக்கும் பிடித்து போக படத்தை இயக்க ஓகே சொல்லியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. அரண்மனை 4 படத்தின் வெற்றியால் நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் சுந்தர் சி மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள படத்தில் அவர் ஹீரோவாக நடிப்பாரா அல்லது மற்றொரு ஹீரோ நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











